பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டால்ஸ்டாய் கதைகள்

டான். கணக்கிடும் சட்டத்தின் துணை இல்லாமல் அதைத்திட்டமாகக் கண்டு பிடிக்க முடியாது அவனால்.

‘எப்படியானாலும் சரிதான். நான் பத்தாயிரம் கொடுக்கமாட்டேன். ஏகதேசம் எட்டாயிரம் ரூபிள்கள் கொடுக்கலாம். நடைபாதை, காட்டு வழிகள்—இந்த வகைக்காகக் கொஞ்சம் குறைத்தாக வேண்டும். சர்வேயர் கையிலே கொஞ்சம் வெண்ணெய் தடவினால் சரியாகிவிடும். அவனுக்கு ஒரு நூறு அல்லது நூற்றைம்பது ரூபிள்கள் கொடு. மொத்தத்திலே அஞ்சு பகுதி நிலத்தைக் காட்டு வழிகள் என்று கணக்குப்பண்ணி அவன் தள்ளுபடி செய்து விடுவான். ஆகவே அவன் எட்டாயிரத்துக்குத் தந்து விடுவான். மூவாயிரம் ரொக்கமாகக் கைமேலே. இந்த ஒன்றே அவனை சரிக்கட்டி விடுமே! நமக்கு ஏன் பயம்?’ என்று நினைத்து, அவன் தனது பையிலிருந்த பணத்தை முன் கையினால் அழுத்திக் கொண்டான்.

‘அந்தத் திருப்பத்தை நாம் எப்படித் தவற விட்டோம் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அந்த இடத்திலே தான் காடு இருக்கவேண்டும். காவல்காரனின் குடிசை இருக்கும். நாய்கள் குரைத்துக்கொண்டிருக்கும். ஆனால் நாசமாய்ப் போகிற நாய்கள் தேவைப் படுகிற சமயத்தில் குரைப்பது கிடையாது.’

அவன் காதுகளை மூடி மறைத்திருந்த கழுத்துக் காலரைக் கீழே தணித்து விட்டு கவனித்துக் கேட்டான். எனினும் முன்பு போலவே இப்பொழுதும் காற்றின் கீச்சொலிதான் காதில் விழுந்தது. வண்டிச் சட்டங்களில் கட்டப்பட்டிருந்த கைக்குட்டையின் படபடப்பும் அசை வொலியும், வண்டியின் மரப்-