பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டால்ஸ்டாய் கதைகள்

மேலாகப் போட்டிருந்த கனத்த துணி நழுவிக் கீழே விழுந்திருந்தது. பனி படிந்த தலையும், அதன் முன்னால் ஆடி அசையும் மயிர்க்கற்றையும், பிடரி மயிரும் இப்பொழுது பார்வையில் நன்றாகத் தென்பட்டன.

வாஸிலி ஆன்ட்ரீவிச் வண்டியின் பின்பக்கமாக எட்டிப் பார்த்து அங்குள்ளவற்றைக் கவனித்தான். முதலில் எப்படி உட்கார்ந்தானோ அதே நிலையில் தான் இன்னும் இருந்தான் நிகிட்டா. அவனை மூடிக் கிடந்த சாக்கும், அவனுடைய கால்களும் பனியினால் கனமாக மூடப்பட்டுவிட்டன.

‘அந்தக் குடியானவன் குளிரினால் விறைத்துச் சாகாமல் இருந்தால் போதும்! அவனுடைய உடுப்புகள் படுமோசமாக உள்ளன. அவனுக்காக நான் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள நேரிடும் என்ன உபயோகமற்ற ஜனங்கள் அவர்கள்—கல்வி அறிவு இல்லாதவர்கள்!’ என்று வாஸிலி எண்ணினான். குதிரை மீது கிடந்த கம்பளித் துணியை எடுத்து நிகிட்டா மேலே போட்டு மூடிவிடலாம் என்றுகூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால், வெளியே இறங்கி நடமாடுவது என்றால் ரொம்பவும் குளிராக இருக்குமே; அதுவும்போக, குதிரை விறைத்துப்போய் செத்தாலும் செத்துவிடுமே. ‘இவனை நான் ஏன் என்னுடன் அழைத்துவந்தேன்? எல்லாம் அவளுடைய முட்டாள் தனத்தினால்தான்!’ என்று அவன், தனக்குப் பிடிக்காத தன் மனைவியைப் பற்றி எண்ணிக் கொண்டான்.

எனவே, அவன் வண்டியின் முன்புறத்தில் உள்ள தனது பழைய இடத்திலேயே உருண்டு படுத்தான். என்னுடைய மாமா ஒரு சமயம் ஒரு ராத்திரி பூராவும்