பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

87

அவன் பின்னால் சாய்ந்து தன்னை நன்றாகப் போர்த்திக் கொண்டு, சென்ற கால நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்ப்பதிலும் சிந்திப்பதிலும் ஈடுபட்டான். திடீரென்று, எதிர்ப்பாராத வகையிலே அவன் தன் நினைவு இழந்து தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.

சடக்கென்று எதுவோ அவனை ஒருதரம் உலுக்கியதாகத் தோன்றவும் அவன் கண் விழித்தான். அப்படிச் செய்தது அவனுக்குக் கீழே கிடந்த வைக்கோலில் கொஞ்சம் கவ்வி இழுத்த முக்கார்ட்டிதானோ; அல்லது அவனுள்ளிருந்த எதுவோ தந்த அதிர்ச்சிதானோ; எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நல்ல விழிப்பைக் கொடுத்துவிட்டது. அவனுடைய இதயம் வேகமாக, மேலும் மேலும் வேகமாக, அடித்துக்கொண்டது. அதனால் அவனிருந்த வண்டிகூடக் குலுங்குவதுபோன்ற பிரமை ஏற்பட்டது அவனுக்கு. அவன் கண்களைத் திறந்தான். அவனைச் சுற்றிலும் உள்ள எல்லாம் முன்போலவே இருந்தன. ‘இப்பொழுது வெளிச்சம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது. விடிவதற்கு இன்னும் ரொம்ப நேரம் பிடிக்காது என்று எதிர்பார்க்கிறேன்’ என அவன் எண்ணினான். ஆனால் அதிக வெளிச்சம் பரவியிருந்தது சந்திரன் உதயமாகிவிட்டதனால் தான் என்ற உணர்வு அவனுக்கு உடனடியாகவே ஏற்பட்டது.

அவன் எழுந்து உட்கார்ந்து, முதலில் குதிரையைக் கவனித்தான். இன்னும் காற்றின் பக்கமாகவே பின்புறத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு உடம்பெல்லாம் வெடவெடக்க நின்றது அது. பனி நன்கு கவிந்து மூடிவிட்ட கம்பளித் துணியின் ஒரு பகுதி பின்னால் விசிறித் தள்ளப்பட்டுக் கிடந்தது. அதன்