பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டால்ஸ்டாய் கதைகள்


‘ஒரு பெஞ்சு மீது கதகதப்பாகப் படுத்துக் கிடந்தால் அதன் சுகம் எவ்வளவு விசேஷமானதாக இருக்கும்!’ இவ்விதம் எண்ணிய அவன், காற்றிலிருந்து இன்னும் அதிகப் பாதுகாப்புடனும், இப்பொழுதை விட அதிகமான சௌகரியத்தோடும், படுத்துக் கிடக்க முயற்சிகள் செய்ததனால், அநேக தடவைகள் உருண்டு புரண்டான். கால்களை நெருக்கிச் சுருட்டிக்கொண்டு, கண்களை மூடியவாறு, அசையாமல் கிடந்தான். ஆனால் தடித்த தோல் பூட்ஸினுள் கட்டுண்டிருந்த கால்கள் வெகு நேரம் ஒரே நிலையில் இருந்தால் வலி எடுக்க ஆரம்பித்தது. அல்லது காற்று வேறொரு புறத்திலிருந்து உள்ளே நுழைந்து தொல்லை கொடுத்தது.

கொஞ்ச நேரம் அமைதியாகப் படுத்துக் கிடந்த பிறகு, மனக்குழப்பம் ஏற்படுத்தும் அவ் வுண்மையை—இந்த நேரத்தில் தான் கிரிஷ்கினோவில் உஷ்ணம் நிறைந்த குடிசையில் அமைதியாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கலாமே என்று மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அவதியுற்றான் அவன். ஆகவே அவன் திரும்பவும் எழுந்து உட்கார்ந்தான்; சுற்றிலும் பார்த்தான்; இழுத்துப் போர்த்தினான்; மீண்டும் பழையபடியே படுத்தான்.

ஓர்முறை தூரத்தில் எங்கோ கோழி கூவியதைக் கேட்டதாக அவன் எண்ணிக்கொண்டான். அவனுக்கு சந்தோஷம் உண்டாயிற்று. மேல் சட்டையின் காலரைத் தணித்து விட்டு, சிரமத்தோடும் சிரத்தையோடும் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆயினும் அவன் எவ்வளவோ முயற்சித்தும் எதுவும் காதில் விழவில்லை. சட்டங்களினூடே சீறிப் பாயும்