பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

103


புலியூர்க்கேசிகன் - 103 வேதனைப்படுவாள் என்பதனைக் காட்டுவதாக அமைந் துள்ளது, இந்தச் செய்யுள் ஆகும். தன் மகன் களத்திலிருந்து திரும்பி உயிருட்ன் வந்திருக் கின்றான். களத்திற் போரோ மிகவும் கடுமையாக இருக்கின்றது. தன் கைவேலைக் களிற்றின்மீது எறிந்து அதனைக் கொன்றுவிட்டுத், தன் கையில் வேறு ஆயுதம் இல்லாததால் தான் அவன் திரும்பியிருக்கின்றான்; இந்த நினைவெல்லாம் அந்தத் தாயின் உள்ளத்தில் அப்போது எழவே இல்லை. அவள் உள்ளம் பெரிதும் வேதனைப்படுகின்றது; தன் குடிக்கு என்றுமில்லாதபடிபழியைக் கொண்டுவந்து விட்டானே தன் மகனென்று அவள் துடிக்கிறாள்; அவனைப்பெற்ற வயிற்றிலே அடித்துக் கொண்டு, தன் தீவினைக்கு நொந்தும் கொள்ளுகின்றாள். அவளுடைய குமுறலைப் பார்த்தால், அப்படிப்பட்ட பழிச்செயலைச் செய்த மகனை ஏன் பெற்றோமென்று அவள் அடைந்த துடிதுடிப்பும் மனக்கொதிப்பும் நமக்கு நன்கு புலனாகும். "வாதனைப் படுவதிலே வல்லமையுடைய வயிறே வாது விளைத்தலில் வல்லமைகொண்ட வயிறே! நீ நோன்பு செய்யாது போயினைபோலும்! அதன் காரணமாகத்தான் நின்னிடத்தி லிருந்து அவன் வந்து உலகிடத்தே தோன்றினான் போலும்! “தம்முள் மனம் பொருந்தாது போயினர் சேரமானும் தகடுர் அதிகமானும் அதன் காரணமாகக் கொடிய போரினும் அவர்கள் ஈடுபட்டனர். அதன்கண், அரிதான போர்த் தொழிலைச் செய்து, அந்தக் களத்திலே, மகனே! நீ செத்தொழிதலைச் செய்யாது போயினையே! - "மிகுதியான புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட களிற்றினை, வேலினால் எறிந்து கொன்றனை என்பார்கள். ஆனால், நின் கைவேல் அந்த யானையினது முகத்திடத்திலே ஒழிந்துபோக, நீயும் அந்தக் களத்தினின்றும் வெளிப் போந்தவனாகத் திரும்பி வந்துள்ளனையே!” . "தமிழ்ப் பண்பினைக் கல்லாத நின்னைப் பெற்றது இந்த வயிறு எம் இல்லத்து இதுவரை எவரும் செய்யாது பெரும் பழியினைச் செய்துவிட்டதே! - "வருத்தம் அந்தத் தாயின் மானவுணர்வினைப் பெரிதும் புண்படுத்த, அவள் அந்நிலையே உயிரினைவிட்டுச் சிறந்தனள்' என்றும் நாம் அறிதல் வேண்டும்.