பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

71


'உயிரானது இந்த உடற்கூட்டிலே நிலைத்து இருந்து விடக்கூடிய ஒன்றென்று சொன்னாலும், அதனைக் காத்துப் பேணுவதற்கு எந்தப் பழியினையும் நாம் மேற்கொள்ளலாம். ஆனால் அதுவோ, களத்தில் இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் தானாகப் போய் விடக்கூடியதாகவே இருக்கிறது.

ஆகவே, உயிரைப் பேணுவதற்காகப் பின்வாங்குவதில் பொருளில்லை. போர்க்களத்தில் வெற்றி பெறுவதோ, அல்லது வீரமரணத்தைத் தழுவுவதோதான் சிறப்பாகும். பழி வருவதான் புறமுதுகிடுதலைச் செய்வது சிறப்பேயாகாது. அந்தப் பழி என்றுமே மாறாது, வழி வழி வரும் சந்ததியினரையும் சூழ்ந்து நிலைத்த பழியினை உண்டாக்கும். - ... -

"ஆனால் களத்தில் வீழ்ந்தாலும் வெற்றி பெற்றாலும் வருவது எப்போதும் மேன்மைதான். பலரும் போற்றுகின்ற தலைமைப்பாடும் அதனால் அடையப் பெறலாம். பலரும் தொழுது போற்றும் வானுறை வாழ்க்கையையும் அதனால் நாம் அடையலாம். ஆகவே, மேன்மைக்கு உரியனவே செய்யுங்கள். மீண்டும் களம் புகுந்து எதிர்ப்படையினை அழிப்பதிலேயே ஈடுபடுங்கள்.” .

இவ்வாறு வீரமுழக்கம் செய்து நிற்கின்றான் தலைவன். அவனுரை, பின்னோக்கி ஓடத் தொடங்கினவரைச் சிந்திக்கவும், முன்னோக்கி ஆர்த்தெழவும் தூண்டுகின்றது.

தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாமவற்கு ஒற்கத் துதவினா னாகுமாற் - பிற்பிற் பலர்ஏத்தும் செம்மல் உடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருப செய்பவோ - தாமேயும் போகும் உயிர்க்கு. (புறத் 1ே) 'உயிரைப் பாராட்டாது சென்று கடனை நிறைவேற்றிப் புகழை பெறுவீராக’ என்று தன் படை மறவரை ஊக்கப் படுத்துகின்ற சிறந்த செய்யுள் இதுவாகும். படை மறவரது மறமாண்பிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டும் இது.

21.கண்ணும் படுங்கொல்!

- தகடுர் நாட்டு மறவன் ஒருவன், காவற்காட்டின் ஒரு பகுதியைக் தன்னொத்தாரான வேறு சில மறவர்களுடன் ஒரு பகல் முழுவதும் காத்து நின்றிருந்தான். அன்று பகல்முழுவதும் அவனுடைய காவல் எல்லையருகே சேரப்படை எதுவும் வரவில்லை. வேறு பகுதிகளிலோ கடுமையான மோதல்கள்

நிகழ்ந்தன.