பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தகடூர் யாத்திரை


“அதனால், "வலியுடையார் எதிரிட்டு நிற்பீராக. வீழ்ந்து நடுகல்லில் நிலைபெறுவீராக என, வெம்மையான போரினை நிகழ்த்த மிகுதியான ஆர்வத்துடன் இவன் வந்துள்ளனன்.

“ஆற்றல் உடையவனாகிய இவன் நிற்கும் நிலைதான் அஞ்சுதற்குரிய ஒரு தகைமையை உடையதாகும்."

வல்லோன் செய்த வகையமை வனப்பிற் கொல்வினை முடியக் கருதிக் கூரிலை வெல்வேல் கைவலன் ஏந்திக் கொள்ளெனிற் கொள்ளுங் காலும் மாவேண் டானே மேலோன் அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக் கழற்கால் இளையோன் அழற்றிகழ் வெகுளி இகழ்தல் ஒம்புமின் புகழ்சால் மன்னிர்! தொல்லை ஞான்றைச் செருவினுள் இவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே! அதனால், வல்லோர் பூழை நின்மின் கல்லென வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின் * ... " அஞ்சுதக உடைத்திவ் வாற்றலோன் நிலையே!

- (ഗ്ഗഴ്:ീ.) மறமாண்பில் தலைசிறந்தாரான மாண்புடைய மறவர்கள் பலர் இவ்வாறு இருதிறப் படையணிகளினும் மிக்கிருந்த காரணத்தால், தகடூர்ப் பெரும் போரும் வரலாற்றுச் சிறப்புடையதொன்றாக விளங்கிற்று என்று நாம் அறிதல் வேண்டும். - - -

தொல்லை ஞான்றைச் செருவினுள், இவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர், கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம் பொறுத்தல் செல்லா, பல முரிந்தனவே என உரைக்கின்ற ஆண்மையின் மிகுதிப் பாட்டை அறிந்து இன்புறுக. - -

85. எறிந்தது களிறு:

தகடூர்க் கோட்டை மதிலைச் சேரரது வலிய களிறுகள் பலவும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் மிகவும் மூரிப்புடைய களிறு ஒன்று மிக வன்மையாகத் தன் பூனிட்ட கொம்புகளால் குத்திக் கொண்டிருக்கின்றது. கதவுகள் நடுங்குகின்றன. விரைவில் உடைபடும் என்ற அச்சம் எப்புறமும் பரவுகின்றது. - -