பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை திவ்ய தேச யாத்திரையினால் உண்டாகும் பெரும் பயனைப்பற்றி இப்புத்தகத்தின் முதற்பாகம் நூன் முகத்தில் விவரமாகவும், இப்புத்தகத்தின் நூன்முகத்திற் சங்கிரகமாகவும் எழுதியிருக்கின்றனன். இப்பயனைக் கருதியே நான் பரதகண்டத்தின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பாகங்களில் யாத்திரை செய்வதற்கு முன்பே, இத்தக்ஷண தேசமாகிய இத்தென் இந்தியாவிலுள்ள அநேக சைவ வைணவ க்ஷேத்திரங்களுக்கு நேராகப் போய்க் கண்டும் கேட்டும் ஆனந்தித்து, அவற்றின் சில விசேஷ ஸ்தலங்களுடைய சரித்திர சாரங்களை எனது கலாநிதிப்பத்திரிகையில் பதிப்பித்து வந்ததன்றியில், ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி, திருநாராயணபுரமென்னும் மேல்கோட்டை முதலான சில விசேஷ ஸ்தலங்களின் மஹத்துவங்களைப் புத்தக ரூபமாகவும் பதிப்பித்தேன். அப்புத்தகங்களையும், ஆரியர் திவ்ய தேசயாத்திரை என்னும் வடதேச யாத்திரைப் புத்தகத்தையும் வாசித்த அன்பர்கள், இத்தக்ஷண தேச திவ்ய ஸ்தலங்களின் சரித்திரத்தையும் எழுதிப் பதிப்பித்துத் தரும்படி நேரிலும், கடித மூலமாகவும் எழுதிக் கேட்டுக்கொண்டுவருவதால், அவர்கள் திருப்தியின் பொருட்டு இப்போது இந்த இரண்டாம் பாகத்தையும் பதிப்பித்தனன். வடதேசங்களில் ஹிந்தி, ஹிந்துஸ்தானி, பங்காளி, ரோகில் குத்தி, குஜராத்தி, மராட்டி முதலான பாஷைகள் வழங்கி வருவதால், அந்நாட்டிலுள்ள தீர்த்ததல மூர்த்தி தல மகிமை முதலான விஷயங்களைத் தமிழ் நாட்டார் அறிந்து கொள்வது கஷ்டசாக்தியமென்றெண்ணி, அவற்றின் விஷயங்களைச் சற்று விவரமாக எழுதித் தெரிவிக்க நேர்ந்தது. தக்ஷண தேசமாகிய இத்தென்னாட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான பாஷைகள் வழங்கிவந்தாலும், அப்பாஷைகளில் திவ்ய தீர்த்த திவ்ய ஸ்தல விவரங்களைப்பற்றிய விஷயங்கள் சகலரும் சுலப பிரயாகையால் அறியக்கூடியவைகளாயிருக்கிறபடியாலும், வடநாடுகளை விட இத்தென்னாட்டில் மூர்த்திதலம் தீர்த்த தலங்கள்