பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை ஏராளமாயிருப்பதாலும், இதை இதன் முதற் புத்தகத்தைப் போல விரித்து எழுதாமல் சங்கிரகமாகவே எழுதியிருக்கின்றனன். நான் தென்தேச திவ்ய ஸ்தலங்களில் யாத்திரை செய்தபிறகு, யாத்திரைக்காரர்களுக்கு உபயோகமாகச் சில சைவ வைணவ க்ஷேத்ர மான்மியங்கள் பதிப்பிக்கப்பட்டன. ஆயினும், அவைகளில் பெரும்பான்மையும் புராணங்களிற் கண்ட சங்கதிகள் மாத்திரம் இருக்கின்றனவேயொழிய, அவ்வவ் ஸ்தலத்தின் பூர்வஸ்திதி, அவைகளுக்குப் போக்குவரத்து செய்யும் வசதிகள் முதலியன சொல்லப்படவில்லை. மேற்காட்டிய குறைவுகளை ஒருவாறு நீக்கக் கருதி இப்புத்தகத்தை முக்கியமாகப் பதிப்பித்தனன். இப்புத்கத்திற்கண்ட பெரும்பான்மையான ஸ்தலங்களுக்கு நான் நேரில் போய்க் கண்டும் கேட்டும் வந்திருப்பதோடு, கோயிற்புராணம், அநேக ஸ்தல புராணங்கள், திருப்பணி மாலை, அபிதான கோசம், அபிதான சிந்தாமணி, சிறப்புப் பெயரகராதி, கோயிலொழுகு, கங்காயாத்திரை தீபிகை, சிவக்ஷேத்ர மஞ்சரி, சிவக்ஷேத்ரமான்மியம், விஷ்ணு க்ஷேத்ரமான்மியம் முதலான உதவியைக் கொண்டும், நேரில் போய்ப் பார்த்துவந்த சிலருடைய அனுபவங்களைக் கொண்டும் இதைப் பதிப்பித்தனன். இப்படிப் பதிப்பித்ததில் முன் புராணங்களிற் கண்ட சில ஸ்தலங்கள் மறைந்தும், சில அதிகமுமாயிருக்கின்றதற்குப் பின்வரும் கவியே போதுமான சாதியுமாகும். "ஈண்டு புகழ்ச் சோணாட்டி லொரு நூற்றுக் தொண்ணூ றீழத்திரண்டு பாண்டியி வீரேழ் மலைநாட் டொன்று கொங்கேழ் மகத மிருபத் திரண்டு பூண்ட தொண்டை நன்னாட் டெண்ணான்கு துளுவொன்று வடபுலத் தைந்தாக வாண்ட சிவதல மிரு நூற் றெழுபத்து நான்கு தொகையு மன்றே." இவற்றின் விவரம்: (1) காவிரிக்கு வடகரையிலுள்ளவை 63, தென்கரையிலுள்ளவை 127. (2) ஈழநாடு (இலங்கைத்தீவு) ஸ்தலங்கள் 2. கால்களின்