பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு. 1 தான் நரபதிகளுக்குத் தலைவனென்றும் பால பாகவதம், வச சரித்திரம், நரசபூபாவியத்திற் சொல்லப்பட்டிருக்கிறதாம். அந்தத் தாதபின்னம ராஜுக்கு மன்னுபுலி என்று பெயர். அந்தத் தாதபின்னமராஜுக்குச் சோமதேவன் என் னும் குமாரன் பிறந்து பஹு பராக்கிரமசாலியாகி 60,000 சேனைகளை உடையவனாக இருந்தானாம். அவன் ஆர்வீட்டு என்னும் இடத்திலிருந்து ஆண்டு, கொண்டனவலி, இரா பச்சூர், சாதனிகோட்ட, யாதவகிரி, காலப்கோலு, முசவி படுகு, கங்களினிகொண்ட என்று எழு கோட்டைகளையும் பிடித்து ஆண்டானாம். அவனுக்குப் பாரமல்லன் அல்லது விபாலன் என்ற பட்டப்பெயர் வழங்கிவந்ததாம். அவனுடைய குமாரன் இராகவராஜன் ஆண்டபிறகு, அவன் குமாரன் பின்னமராஜன் அல்லது பின்னசவுரி பட் டத்துக்கு வந்தானாம். அவனுக்குச் சாலுவ நாசிங்கராயலு பிரதம மந்திரியாக இருந்தானாம். அந்த பின்னமராஜுக் குப் பிறகு அவன் குமாரன் புக்கராஜன் பட்டத்துக்கு வர் தானாம். அவன் ஆருவிடுவில் வந்து குடியிருந்தபடியால் அவனுக்கு ஆர்வீட்டு புக்கராஜன் என்று பெயர் வழங்கி வந்ததாம். அவனுக்கு அபலாதேவி, பல்லாதேவி என்ற இரண்டு மனைவிகள் இருந்தார்களாம். அவர்களில் அபலா தேவி வயிற்றில் சிங்கராஜனும், பல்லதேவி வயிற்றில் இராம ராஜனும் பிறந்தார்களாம். அவர்களில் இளையகுமாரனான இராமராஜன் கண்டனவலியில் சண்டை செய்து கலியாண புரத்தைப் பிடித்து ஆண்ட தன்றியில், அதவேனியை அடு த்த காகதேசத்தையும் ஜயித்தானாம். கோனேரிநாதர் கணக்கின்படி அந்த அரசனிடம் அப்போ திருந்த சேனை பின் பலம் 70,000 பதாதிகளாம். இராமராஜாவின் மனைவி இலக்கம்பாள் வயற்றில் திம்ம ராஜன், கொண்டசவுரி, ஸ்ரீரங்கராஜன் என்ற மூன்று மக் கள் பிறந்து, அவர்களில் கடைசி மகனான ஸ்ரீரங்கராஜன் கலியாண பாத்தின் பட்டத்தை அடைந்தானாம். அவனு டைய மனைவி திம்மாம்பாளாம். அவன் நைஜாமின் கொட் டத்தை அடக்கியும், காஞ்சிபுரத்தைப் பிடித்தும், கர்னாடசு தேசம் முழுவதையும் சுவாதீனமாக்கிக் கொண்டானாம். அந்த ஸ்ரீரங்கனுடைய அண்ணன் திம்மராஜன் ஆர்லிடு வில் குடியிருந்தான். அவனுக்கு மன்னிபுலி அதாவது