பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162  திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம்

(2-ஆம்

சண்டை செய்து ஜயித்துத் தன் வசமாக்கிக்கொண்டான். அச்சண்டைகளில் மகமதிய சேனைத் தலைவரான மீயர்பைசு பல்லி சாய்பு இந்துக்களால் கொல்லப்பட்ட சங்கதி சுல்தான் பெபோஜிஷா கேட்டு மனமொடிந்து அதே விசனத்தில் மாணமடைந்தான். அந்தச் சுல்தானுக்குப் பிறகு வந்த அஹமத்வா தனது தகப்பனாருக்கும் சேனைக்கும் உண்டான கண்டத்தைக் கருதி 1422 சேவராயலுக்கு விரோது மாகப் படையெடுத்து வந்து விஜயாகாந்தை முற்றுகை போட்டு வழியில் கண்ட கோயில் கோபுரங்களை எல்லாம் இடிக்ராச் சண்டை செய்ய, அவனது யுத்த செலவைத் தகவகாகச் சமாதானமாகியது. அந்தப் பிரமாத சண்டை சச்சரவுகளினால் 1424-25 நாட்டில் பிரமாத பஞ்ச முண்டாகிப் பல்லாயிரம் பிரஜைகள் பரலோக மடைந் தார் கள். அந்தச் சண்டையினால் இந்துக்களுக்கு வரவர வில் வித்தையில் சாமார்த்தியம் குறைந்து போய் விட்ட தென்று கண்டு, தேவராயலும் தனது சமஸ்தானத்தில் 2,000 மக மதியரைச் சேனையில் சேர்த்தும், அவர்களுடன் 80,000 இந்துச் சிப்பாய்களையும் சேர்த்தும், மகம தியரை விஜய நகரத்தில் வதிந்து வரும்படி இடங்கொடுத்தும், அவர்க ளால் இராஜத்துரோகம் செய்கிற தில்லை யென்று சொல்லிக் குரானில் சத்தியம் வாங்கியும், அக்குரானைத் தனது ஸமஸ் கானக்சில் வைத்துக்கொண்டான். அப்படி மகம் தியரை இந்து சேனையோடு சிப்பாய்களாகச் சேர்த்துக்கொண்டது இந்த விஜயபூபதி காலத்தில்தான் ஆரம்பம். 1435 சுல்தான் அஹமத் சாயபு இறந்துவிட அவனுடைய குமாரன் அலாவுதீன் பட்டத்துக்கு வந்தான். அவனது தம்பி மகமது, தேவராயலுடைய உதவியினால் அலாவுதினை ஜயித்து செயிச்சூர், பீஜப்பூர், ஷோரனூர் முதலான கோட்டைகளைப் பிடித்துக்கொள்ள, தேவராயலை மஹா பராக்கிரமசாலி என்று மகமதியர்கள் கொண்டாடி னர். அந்தக்காலத்தில் (1420-1421g) விஜயநகரத்தை வந்து பார்த்த ஐரோப்பிய யாத்திரைக்காரராகிய நிகோலா கோண்டி " (Nicola Conti) என்பவர் விஜயநகரம் சகல சம் பத்துகளைப் பெற்றும், 60 மைல் சுற்றளவுள்ள சிறன் த பட் டணமாகவும், 90,000 சேனாவீரர்களால் காக்கப்பட்டும், சஹகமனம், ரத உற்சவம், செடில் குத்தியாடல் முதலான