பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 179 வென்றும், அப்படிப்பட்டவன் மேல் படையெடுப்பது தருமமல்லவென்றும், திம்மாசு மந்திரி தடுத்துச் சொல்லி யும், கிருஷ்ண தேவராயலு கேளாமல், படை எடுக்க, அப்படைகள் அங்கிருந்த பயங்கரமான வனத்துக்குள் சண் டைக் கோலமாகப் போக, அங்குச் சித்தாவுக்கான் என் னும் மஹமதிய வீரன் 60 ஆயிரம் சேனையோடு வந்து தாக்க, உடனே கஜபதியின் சேனைகளும், சித்தாவுக்கான் சினேக பந்தத்தால் மற்றோர் புறம் வந்து கிருஷ்ணதேவராயலை வளைத்துக்கொள்ள, கிருஷ்ணதேவராயலுடைய சேனை கள் வேறு வழிபோக வழியற்றுத் தவிப்பதைக் கிருஷ்ண தேவராயலு கண்டு ஓஹோ! மந்திரி திம்மாசு வார்த்தை யைக் கேளாமையால் இந்த வம்புவந்து வாய்த்ததே என்று முகம் வாடி நிற்பதைத் திம்மாசு மந்திரி பார்த்து வேந்தே! விசனப்படாதே; மிஞ்சிப்போன காரியத்தை எஞ்சி எஞ்சி யோசிப்பதில் பிரயோசனமில்லை; இந்த அசந்தர்ப்பத்தில் இராஜ தந்திரமாக காரியத்தை முடித்தால் மாத்திரம் காரிய சித்தி பெறலாம்' என, கிருஷ்ணதேவராயலு " அஃதெப்படி" என, இதோ செய்கிறேன் பாருங்கள்" என்று அடியில் கண்ட உபாயத்தைச் சொன்னார். அதா வது: இந்தச் சண்டையில் அதிக வீரதீரனான மகமது சித வத்கானுக்கு ஒரு கடிதமெழுதி, அக்கடிதத்தில் போர் தாங்கள் முன் கிருஷ்ணதேவராயலுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தபடி, கஜபதிபிரதாபருத்திரரை உயிருடன் பிடிக் துக் கொடுத்தால் உமக்கு வாக்குத்தத்தம் செய்தபடி ஓரங்கல் கோட்டையையும், பின்னுமநேக சிராமங்கள் தண்டு தளாதி ஆபரணங்களையும், பஹமானமாகத் தாச் சித்தமாக இருக்கிறோம்; அதற்கு அத்தாக்ஷியாக இக் கடி தத்துடன் சில ஆடை ஆபரணங்களை அனுப்பியிருக்கின் றோம். அங்கீகரித்துக்கொண்டு இது சங்கதியை யாவருக் கும் அறிவிக்காமல் அதிக அந்தரங்க சங்கதியாக வைக்க வேண்டும். இப்படிக்கு இஷ்டன், மஹாமந்திரி, சாலுவ திம்மரசு." என்று எழுதிக் கிருஷ்ணதேவராயலுக்குக் காட்ட, கிருஷ்ண தேவராயலு பார்த்து இப்படிப்பட்ட காரியம் செய்ய இஷ்