பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 189 டாம், கிருஷ்ண தேவராயலுடைய பிறப்பைப்பற்றி அப்பா அவர்கள் அதிகமாகத் தங்களுக்கும் மற்ற பந்து மித்தியாக ளுக்கும் திருப்திகரமாகச் சொல்லியிருந்தும், கேவலம் பொறாமையுள்ள சில பந்துக்கள் வார்த்தைகளை நம்பி இப் படிக் கிலேசப்படுதல் ஆச்சரியம். என்னைக் கிருஷ்ண தேவ ராயலுக்குக் கட்டிக் கொடுக்காமல் நமது பந்துக்களில் யாரோ ஒரு முட்டாள் பயலுக்குக் கட்டிக்கொடுத்துவிட டால் அப்போது இப்படிப்பட்ட வார்த்தைகள் நடவா, நம்மைவிட நமது அப்பா ஞானமும் அறிவு மில்லாத அ சரா? என்னை இழிகுலத்தானுக்குக் கட்டிக்கொடுத்தால் அவருக்கு அவமானமில்லையா? அவர் இந்த அவமானமான காரியத்தைச் செய்தும் மீசைவைத்துக்கொண்டு அரசு செய்வாரா? இத்யாதிகளை ஆர அமா யோசியாமல், தங்க ளுக்குத் தெய்வீகமாக அமைந்த மருமகனாகிய கிருஷ்ண தேவராயலைப் படுக்கை வீட்டில் கொன்று விட்டுவாச் சொல்லுகிறீர்களே, இது தருமந்தானா? அடைக்கலம் என்று அண்டிய பகையாளிகளையும் ஆதரிக்கவேண்டு மென்று க்ஷத்திரிய தரும் விதியாக இருக்க, இரவில் நிரப் ராதியாகவும், நிசாயுதபாணியாகவும், பத்தினியை நம்பிப் படுத்துத் தூங்கும் இராஜாதிராஜனைக் கொல்ல எவர் மனது தான் துணியும்? கொள்ளைகள் அடித்தும், குடும்பம் களைக் கெடுத்தும், கொலைகள் செய்யும் குரூர கல்நெஞ்ச முள்ள கள்ளரும், நிரபராதியானவர்களைக் கொல்லத் துணி யார்களெனில், என்னைத் தமது வாழ்க்கைத் துணையாகக் கொண்டு, உலகில் உள்ள நாள் உள்ளவரையிலும், பரலோ கத்திலும் எகதேகமாகவும், ஏகமனசாகவும் இருப்பதாக வாக்களித்துத் தரும் விவாஹம் செய்துகொண்ட உயிர்த் தோழனை உரங்கும் போது உயிர்வாங்கும்படித் தாங்கள் என க்குப் போதிப்பது தருமமா? என்னைப் பாணிக்கிர ஹணம் செய்து கொண்டவன் பள்ளனானாலும், பறையனானாலும், முரடனானாலும், குருடனானாலும், குஷ்டரோகியானாலும், துஷ்டனானாலும், திருடனானாலும் எனக்குக் கணவனே பல்லவா? அப்படிப்பட்டவனை இரவில் படுக்கையில் கொல் லச் சொல்வது பதிவிரதையாகிய தங்களுக்குத் தகுமா? நான் எக்காரியம் செய்யினும் பதிதுரோகமாகிய இக்காரி யத்தைச் செய்யேன் " என்று அழுது, குனிந்து தன் தாயார் பாதங்களைப் பிடித்து கோன் அப்படிச் சொன்ன தற்கு க்ஷயிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டாள். இத்தியாதி