பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். 2-ம் களைக் கேட்ட ராஜமஹிஷி தன் குமாரத்தி கிருஷ்ணதேவ ராயலுடைய மோகத்தில் மூழ்கிவிட்டாள் ; இனி அவளைத் திருப்புவது கஷ்ட மெனக் கண்டு வேறு உபாயத்தை திய மித்தாள். அதாவது, தனது குமாரத்தியுடன் கிருஷ்ண தேவராயலுடைய படுக்கைவீட்டுக்குப் போய்த் தம் மகளை அலங்கரிக்கும் இரண்டு தாதிப்பெண்களை அந்தரங்கமாக அழைப்பித்தும், அவர்களுக்கு நடந்த சங்கதிகளை யெல்லாம் சொல்லியும், கிருஷ்ணதேவராயலு சோபனத்திற்கு இராஜ குமாரத்தியை அலங்கரிக்கும்போது, அவள் இடுப்பில் வில் வைத்த சிறு கத்திகளை ஒட்டியாணத்துடன் தெரியாமல் பூட்டி, மேலே மெல்லிய சால்வையைப் போட்டு மூடிப் படுக்கவைத்தும், அந்த இராஜகன்னிகையின் இடுப்பில் கிருஷ்ணதேவராயலு கை போட்டவுடனே அந்த வில்கத்தி கள் பீறிட்டுப் பாய்ந்து, கிருஷ்ணதேவராயலைச் சின்ன பின்னமாகக் குத்திக் கொல்லும்படி செய்வித்தும், தனது குமாரத்தியைக் கஜபதி டீைஸ் தானத்துக்கே மறுபடியும் கூட்டிக்கொண்டுவந்தால் நல்ல மானியங்களும் வெகுமதிக ளும் தருவதாகவும், இச்சங்கதியைத் தன் குமாரத்திக்குக் கூடத் தெரிவிக்கக்கூடாதென்றும் சத்தியம் வாங்கிக்கொண் டும், நல்ல வில்வைத்த கத்திகளைச் செய்வித்துப் பட்டுச் சால்வைகளில் மறைத்துக் கொடுத்தும், தம் மகளுக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களைக் கொண்டு சிங்காரித்துத் துக்கத்தோடு அழைத்துப்போய்ப் பல்லக்கில் அமர்த்தியும், அவளுக்குத் துணையாக முன்னாடியே தாயார் செய்து வைத்திருந்த தாதிமார்களையும், பந்து மித்திரர்களையும் அனுப்ப, கஜபதி பார்த்துத் தனது மருமகனாகிய கிருஷ்ண தேவராயனுக்குத் தாயார் செய்துவைத்திருந்த வரிசைக ளுடனும், தண்டு களாகிகளுடனும், சகல வாத்திய கோஷ ங்களுடனும் நரபதி சமஸ்தானத்துக்கு அனுப்பினார்கள். அப்படிப் பவனியாக வந்த சங்கதியைக் கிருஷ்ணதேவ ராயலும் திம்மாசுங் கேட்டுச் சந்தோஷப்பட்டு, சமஸ்தா னத்திலுள்ள பெரிய உத்தியோகஸ்தர்களையும், தேவப் பிராம்மணர்களையும், பந்து மித்திரர்களையும் முன்ன னுப்பி அழைத்துவரச் செய்தும், அரண்மனையின் நாலாபக்கங் களில் நகபத், நகாரு மேளவாத்தியம், நாட்டியங்களும், பாட்டுக் கச்சேரிகளும், விருந்துகளும், தாம்பூல் மரியாதை களும் நடக்கவும், விஜயகா மெங்கும் மேளவாத்தியங்க