பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 191 ளும், தாம்பூல சுப சோபனங்களும், சாப்பாடு சந்தோ ஷங்களும் நடக்கவும், இராஜகுமாரியைத் தக்க மரியாதை யுடன் அழைத்து வந்தும், தேவப்பிராம்மணர்களால் ஓமங் களைச் செய்வித்தும், சமஸ்தான பெண்களைக் கொண்டு திருஷ்டி ஆலத்தி முதலான சடங்குகளைக் கிரமமாக நிறை வேற்றியும், பெண்ணைப் படுக்கைவீட்டுக் கனுப்ப, அவள் கூடவந்த தாதிமார்கள் அப்பெண்ணைத் தக்க ஆடை ஆபா ணங்களால் அலங்கரித்தும், இடுப்பில் வில்கத்திகளைப் பூட்டி மேலே சால்வையைப் போட்டு மூடவே, இராஜ குமார் பார்த்து, "எ தாதிகாள்! இவ்வில்லுள்ள கத்தி களை இடுப்பில் என் புகட்டுகிறீர்கள்?' என, காதிகள், அம் மணி / நீங்கள் க்ஷத்திரிய ஜாதியானபடியால், தங்கள் நாய கர் கட்டாரியை வைத்து விவா ஹம் செய்து கொண்டார். தாங்கள் அதற்குப் பதிலாக இந்த விலகத்திகள் வைத்து ஒட்டியாணத்தைப் புகட்டிக்கொண்டு இன்றியவ இராறு னிடம் படுத்தல் புராதன க்ஷத்திரிய தருமம்; ஆகையால் தான் இக்கத்திகளைப் பூட்டினோம்" என, இராஜகுமாரி கேட்டு இப்படிப்பட்ட வழக்கத்தை முன்னும் பின்னும் பாராத பேதையானபடியால், தாதிகள் வார்த்தையை உண்ட மையென்று நம்பித் தரித்துக்கொண்டு தங்கக்கட்டிவில் படுத்தாள். இராஜகுமாரத்தி அப்படிப் படுக்க, கிருஷ்ண தேவ சாயலும் தக்க ஆடையாபரணங்களைத் தரித்துக்கொண்டு படுக்கை வீட்டுக்குப் போகுமுன் தமது தகப்பனாருக்குச் சமானமான மந்திரி திம்மரசை அழைப்பித்து ஆசீர்வதிக் கும்படி கேட்க, அந்தக் திம்மாசும் கண்குளிரக்கண்டு ஆசீர் வசிக்து, 'அரசே! உங்கள் குடும்பமும், கஜபதிகுடும்பமும் அகியில் ஒரே குடும்பஸ்தராக இருந்தாலும், இடையில் இரு குடும்பத்தாருக்கும் இராஜ்ஜிய சண்டை சச்சாவு களில் கடந்த மனஸ்தாபங்கள் இன்னும் பூரணமாகத் தீரா மல் இருப்பதாலும், தங்கள் ஜனன விசேஷத்தைப் பற்றிக் கஜபதி குடும்பஸ் திரிகள் தப்பபிப்பிராயப்பட்டிருப்பதா லும், பேதையராகிய மாதர்கள் மூடத்தனத்தினால் முத வில் யாதாமொரு காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு வியா சுலப்படுவது சஹஜமாகையினாலும், தாங்கள் படுக்கை வீட்டில் ஜாக்கிரதையாகக் கொஞ்சகாலம் கழிக்கவேண் ம்ே' என்று புத்திமதிகளைச் சொல்லி, தாமே கிருஷ்ண