பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் சாயலை அழைத்துப்போய்ப் படுக்கைவீட்டில் விட்டு வந்து தேவேந்திர கொலுமண்டபத்தைப் போலச் சிங்காரி த்து அமைத்திருந்த பள்ளியறைக்குப்போன கிருஷ்ணதேவ ராயலு முத்துகளணிந்த சோபாவில் உட்காரத் தாதிகள் கஜபதி குமாரியை அழைத்துவந்து அரசனுடைய இடது பக்கத்தில் உட்காரவைத்துச் சந்தன புஷ்ப தாம்பூலங்கள் நிறைந்த சிறு மேஜையைக் கொண்டுவந்து இராஜ குமாரத் திக்கு அருகில் வைத்து களித்திருங்கள் என்று சொல்லிக் கதவை மூடிக்கொண்டு வெளியில் போயினர். -உடனே கிருஷ்ணதேவராயலும், கஜபதி குமாரியும் சந்தன புஷ்ப தாம்பூலங்களைத் தரித்தும், ஒருவர்க்கொருவர் மே சமாசாரத்தைப்பற்றிப் புன்னகையுடன் பேசியும், வீணை முதலான வாத்தியக் கருவிகளை வாசித்துக் காட்ட, காமமோகங் கொண்ட கிருஷ்ணதேவராயலு தனது செங் கோவேந்தும் சிங்காரக்கையைத் தனது கட்டழகியின் இருப்பின் மேல் போட்டவுடனே, வில் கத்திகள் பீறிட்டு வந்து தாக்க, கிருஷ்ணதேவர் தந்திரமாகக் குதித்தோட, பிராணபயமற்றுச் சொற்ப காயங்களுடன் அறையைவிட்டு வெளியில் வந்து, மந்திரி திம்மரசைத் தருவித்து, நிகழ்ந்த சங்கதிகளைச் சொல்லி, அந்தப் பெண்ணையும் அவளுடைய பிகா பந்து மித்திரர்களையும் உடனே கொல்லத்தக்க ஏற் பாடுகளைச் செய்யச் சொல்ல, திம்மாசு பார்த்து வேந்தே! விசனப்படாதே! இக்குற்றம் அந்தப் பெண்ணினாலும், அந்தப் பெண்ணின் தகப்பனாலும் நடந்ததல்ல; அந்தப் புரத்திலிருக்கும் அவர் அஞ்ஞான ஸ்திரீகளால் நடந்திரு க்கலாம். ஆகையால் கஜபதியுடன் சண்டைக்குப் போதல் தருமமல்ல; அவருடைய பெண்ணை அவரிடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டால், அந்த அவமான தண்டனையே போதும்" எனக் கிருஷ்ணராயலும் யோசித்துச் சம்மதி த்து, அந்த இராஜகுமாரியைத் தம் தகப்பனார் வீட்டுக்குத் திருப்பி அனுப்ப, அந்தப் பெண் நடந்த சங்கதிகளை யும், முக்கியமாகத் தனது தாயாருடைய துர்ப்புத் தியி னால் தாதிகள் செய்த சூதுகளையும் எண்ணி எங்கி, இனித் தாயார் வீட்டுக்குப் போனாலும் தக்க மரியாதை கிடைக்கா தென்று மயங்கி, தன்னை எங்கேயாவது ஒரு வனத்தில் விட்டுவிட்டால் நலமென அரசருக்கு விண்ணப்பம் செய்ய,