பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) | தெலுங்குநாடு, 153 அவரும் சம்மதித்து நகருக்குத் தூரமான ஒரு வனத்தில் ஒரு வீட்டைக் கட்டி, அதில் சிறையாக வைத்து விட்டதா கப் பிரவுடகவி சரித்திரக் கதையால் தெரியவருகிறது. ' - இருஷ்ணதேவராய லுடைய மனைவியும் கஜபதி குமாரி யுமாகிய துகாம்பா அல்லது வரதராஜம்மாள் அப்படி வன வாசம் செய்த இடம் கடப்பை ஜில்லாவுக் கருகிலென்றும், அங்கு அந்தம்மாள் நான்கு பக்கங்களி விருக்கும் மலைக ளின் மேற் பெய்யும் மழை நீர்வந்து ஒரு பெரிய குளமாகத் தங்கிப் பயிர் பச்சைகளுக்கு உபயோகமாகும்படி அக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் பலமான பெரிய கற்க ளாற் கரைகளைக் கட்டி வைத்ததாகவும், அப்படிக் கட்டிய கரைகளில் இரண்டு பக்கங்களில் மலைக் கணவாய்க் கரை கள் அடிக்கடிக் கரைந்து உடைப்பெடுத்து வெகு பயிர்க ளுக்கு நஷ்டத்தை யுண்டாக்கி வந்ததை அந்தம்மாளுடைய தயிர்க்காரி ஒருத்தி பார்த்துப் பரிதபித்து, அதற்கு நா பலி கொடுத்தால் நலமென்றும், தமக்குத் தக்க பொருள் கொடுத்தால் தமது குமாரர்களாகிய பெரிய கம்பன், சின் னக் கம்பன் என்பவர்களை அந்த அணைக்கு நரபலியாகக் கொடுக்க வாக்குத்தத்தம் செய்ததாகவும், அதன் மேல் அந்தத் துகாம்பா அம்மாள் சம்மதித்து அத்தயிர்க்காரிக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களையும் ரொக்கத் தொகை யையும் கொடுத்து, அவளுடைய இரண்டு குமாரர்களையும் கருவித்துச் சம்மதிப்படச் செய்வித்தும், அவர்களை அங்கு நரபலி செய்ததன்மேல் அந்த உடைப்பு கின்றுவிட்டதாக வும், அப்படிப் பல ஜனங்களுடைய உபயோகத்திற்காகத் தம் பிராணனைக் கொடுத்த கம்பர்களுடைய பெயர்களால் அங்கு ஒரு கிராமத்தை உண்டாக்கி அதற்குக் கம்பம் என்று பெயரிட்டதாகவும், அதைத்தான் இப்போது கடப்பைக் கருகிலிருக்கும் கம்பம் தாலுக்கா என்றும் ஒரு கதை உலாவுகின்றது. -இக்கதைக்கு அனுசரணையாக மிஸ்டர் டொலர் (M. Tavior) எழுதிய கிரந்தத்தில் விஜயநகர ராயலின் மனைவி து காம்பாள் சரியான ஜாதியானுக்கு விவாகம் செய்யர் படாமையால், விசனத்தோடு அவள் வனசஞ்சாரியாகத் தனக்குத் தன் தகப்பனார் கஜபதி கொடுத்த திரவியத்கை எல்லாம் செலவிட்டு இந்தக்குளத்தை உண்டாக்கின தாகக் கடப்பைக் கருகில் ஒரு சாசனம் அகப்பட்ட காக எழு) இருக்கின்றனர்.