பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு. 195 ளுக்கும் பந்து மித்திரர்களுக்கும் சொல்லியும், சிங்காரித் துக்கொண்டு சித்தமாக இருக்கும்படி திட்டப்படுத்தியும் வந்து கோட்டைக்கு வெளியில் நிற்கும் கிருஷ்ணதேவ சாயலு முதலானவர்களைத் தக்க மரியாதையுடன் அழைத் துப்போய்ப் பால் பழக் கொடுத்து, உபசரித்து மங்கள ஸ்நானத்துக்கு அனுப்பி, சுத்தமும் சுந்தரமுமான வஸ் திராபாணங்களைத் தரிக்கச் செய்வித்தும், விவாஹ மண்ட பத்திற்கு அழைத்து உட்காரச்செய்தும் வேத பிராம்மணர் களைக்கொண்டு கலியாணச் சடங்குகளை யெல்லாம் முறைப் படி செய்வித்து முடித்தும், வந்திருந்த பிராம்மணர்களுக்கு லக்ஷக்கணக்கான பூரிதட்சணைகளைக் கொடுப்பித்தும், வக் திருந்த பந்து மித்திரர்களுக்கு விமரிசையாக விருந்துகளை யும் வரிசைகளையும் செய்வித்தும், ஆடல் பாடல் கச்சேரி கள் வைத்தும், சகலரும் சந்தோஷம் அடையும்படி செய் வித்தும், அன்று இராத்திரி சோபன முகூர்த்தத்துக்கு இன்றியமையா அலங்காரப் படுக்கைவீடும், வரிசைகளும் தயார் செய்து கொண்டிருந்தார். அப்படி நடக்கும் காலத்தில் உத்கலதேச மன்ன ருடைய மனைவியிடம் மூடமதியுடைய சில மங்கையர் வந்து, "அம்மணி! இஃது என்ன அநியாயம்! இருந்திரு த்து தங்கள் சுந்தாவ தியைத் தாசி மகனான கிருஷ்ணதேவ ராயலுக்குத்தானா கட்டிக் கொடுக்கவேண்டும்? கிருஷ்ண தேவராயலு சுபத்தினிக்குப் பிறந்தவனல்லனென்றும், அவ அடைய முன் தாரமாகிய கஜபதி குமாரத்தி அவனிடம் வாழமாட்டேன் என்று வனவாசம் செய்யும் சங்கதி தெரி பாதோ? இருந்து இருந்து என்ன இழிவான வேலையைச் செய்துவிட்டீர்கள்! இப்படி இழிவானவனைக் கணவன கக் கட்டிக்கொள்வதைப் பார்க்கிலும், அவனைக் கொன்று விட்டு விதந்துவாக அண்டத்தில் அந்தஸ்தோடு வாழு தல் நலம். கிருஷ்ணதேவராயலுடைய உண்மையான பிறப்பை யறிந்தும் நமது அரசர் சாஜகிய விஷயத்தைக் கருதி இக்காரியம் செய்தாரோ? தாங்கள் எப்படி இப்படிப் பட்ட காரியம் செய்யத் துணிந்தீர்கள்? என்று பலவித மாகச் சொல்ல, இராஜமஹிஷி கேட்டு, "அடி! இஃதென்ன விந்தை! எனது அருமை மகளுக்கு இப்படிப்பட்ட இழிகுலத் தானா கணவனாக வாய்த்தான்? கிருஷ்ணதேவராய லுடைய