பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகம்) தெலுங்குநாடு. 197 இராஜமஹிஷி, கண்மணியே! சொல்லக்கேள்! காரியமோ முடிந்துவிட்டது. இன்று இராத்திரி உனக்குச் சோபன் முகூர்த்தம் நிச்சயித்திருக்கிறார்கள். நீ படுக்கை வீட்டிற குப் போகும்போது உனது அப்பாவின் கைக்கட்டாரியை மடியில் வைத்து மறைத் ஏக்கொண்டு போய் வைத்திருந்து கிருஷ்ண தேவராயலு உன்னோடு தூங்கும்போது அந்தக் கட்டாரியை எடுத்து அவன் வயிற்றில் இரண்டு மூன்ற குத்துகள் குத்தி வயிற்றைப் பிளந்து கொன் அவிட்டு, "யாரோ ஒரு துராத்மா வந்து குத்திவிட்டான்' என்று கூப் பிட்டழுது கொண்டு வெளியில் ஓடி வா. உடனே வந்து பார்ப்பவர்கள் யாரோ பகையாளிகள் இப்படிச் செய்தார் கள்' என்று சொல்லிக் கிருஷ்ணதேவராயலை அக்கினிக்கு இறையாக்கிவிடுவார்கள். அப்படிச் செய்வதனால் நமது குடும்பத்தின் கீர்த்தியும் பிரகாசிக்கிறதோடு, நரபதி ஸமஸ்தானத்துக்கு நடுங்கிக்கொண்டிருக்கும் நார்கள் நிம் மதியாக இருப்பார்கள். நமது ராஜாங்கத்துக்கும் வேறு பயமில்லை" என்று சொல்ல, இராஜகன்னிகை கேட்டு, அழுது, அம்மா! கிருஷ்ண தேவராயலு சுவபத் தினிக்குப் பிறந்தவரென்றும், சுந்தர் புருஷசென்றும், சுத்தவீரரென்றும், சகல சமயத்தாருக் கும் ஜாதியாருக்கும் உபகாரம் செய்யும் வள்ள வென்றும், அநேக கசந்தங்களினாலும் கதைகளினாலும் அறிந்திருக்கத் தாங்கள் இப்படிச் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஆயினும் என்னை எப்போது விரும்பி விவாஹம் செய்து கொ ண்டாரோ அன்றே நான் அவருக்குப் பாரியாளாகிவிட்டே ன் அப்படியிருக்க என் மனசாக்ஷிக்கு விரோதமாக அவரை எப்படிக் கட்டாரியால் குத்திக்கொல்ல மனந்துணியும்? என்று தலை குனிந்து அழுது கொண்டு சொல்ல, இராஜ மஹிஷிக்குக் கோபம திகரித்துப் பதைத்து, ( அம்! படு நீலி! குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக்காம்பே! உனக் கும் உன் அப்பாவுக்கும் பிடித்த பைத்தியம் கலை மீது ஏறி இப்படி இல்லாத பொல்லாத கள்ளக் கதைகளைப் பேச வர் தாய்! அடி மாத்துரு துரோகி! நீ இப்படி என் வார்த்தை க்கு மறுத்துச் சொல்லலாமா? ஆ! ஆ! என்ன கலி காலம்! இன்றோடு செத்தாய்! இனி நீ எனக்குப் பிள்ளையன்று! இப்போதே கிருஷ்ணராயவிடம் போ, இனி உன்னை என் வீட்டிற் சேர்க்க மாட்டேன்" என்று துடித்துச் சொல்ல,