பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் ஏசரா நன்செய் நிலமாகவும், பதினோராயிரத்துச் சொச்சம் எகரா புன்செய் நிலமாகவும், 650 ஏகரா தோட்டக்காலாக வும், மூவாயிரத்துச் சொச்சம் ஏகரா ஒரு சாகுபடிக்கும் வாயக்கில்லாத கரம்பாகவு மிருக்கும். 17 கிராமங்களும் மேற்கண்ட நிலக்காரர்களுக்கு 16 லட்சம் சொச்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க நேரிடுமென்று திட்டமேற்பட்ட போதிலும், அதைவிட மிகவும் ஜாஸ்தியாகுமென்று இப் பொழுது உத்தேசிக்கப்படுகிறது. சாகுபடி வருஷ முழுமையும் சாகுபடிக்கு ஜலம் விடப்படும். 50 மைலுக்குக் குறையாமல் 70 மைல் நீளமுள்ளதாகக் கால் வாய் ஒன்று வெட்டப்படும். அதனால் நேராக ஒன்றேகால் வட்சம் ஏகாா சாகுபடி செய்யப்படும். இப்பொழுதிருக்கும் சரிகளுக்கு அந்தக் கால்வாயிலிருந்து நீர்விட்டு அவைகளைக் கொண்டு 25 ஆயிரம் ஏகரா அதிகசாகுபடி செய்யப்படுமாம். தேக்கத்தின் மின்சார உற்பத்தி சிவ சமுத்திரத்தில் இப்பொழுது 11 ஆயிரம் குதிரை சக்தியுள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன் னொரு 3300 குதிரை சக்தியுள்ள மின்சாரம் உடனே உற் பத்தி செய்யப்படும். இப்பொழுது தேக்கப்படும் தண்ணீரி விருந்து 8000 குதிரை சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எல்லாமாக 20 ஆயிரம் குதிரை சக்தி மினசாரம் உற்பத்தி செய்யப்படும். திட்டப்படி முழுவேலையும் நடந்து விட்டால் 25 ஆயிரம் குதிரை சக்தியுள்ள மின்சாரம் உற் பத்தி செய்யக்கூடும். இதன்றியில் சிவசமுத்திரத் திலிரு ந்து, 4 மைல் தூரத்திலுள்ள விம்ஸா என்கிற இடத்தி லும் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கால்வாய் வழியாக ஜலத்தைக் கொண்டுபோய்த் தேக்குவதாக உத்தேசம். 15 ஆயிரம் குதிரை சக்தியுள்ள மின்சாரத்தை அங்கு உற்பத்தி செய்ய வேறு 30 லட்சம் ரூபாய் செலவிடவேண்டியிருக்கு மென்று திட்ட மேற்பட்டிருக்கிறது. பிறகொரு காலத்தில் ஷிம்ஸாவில் எப்பொழுதும், 40 ஆயிரம் குதினர சக்தி மின்சாரமும், ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு 50 ஆயிரம் குதிரை சக்தி மின்சாரமும் உற்பத்தியாகக் கூடும். இவ் வளவு ஏராளமான சக்தியையும் உபயோகிக்கும் பொருட் டுத் தொழிற்சாலைகளை ஆதரித்து வளப்படுத்த வேண்டியது