பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்முகம் - 2.எ குதிரை சக்தியுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் திட்டமேற்பட்டிருக்கிறது. இன்னொரு 30 லட்சம் ரூபாய் செலவிட்டு விட்டால், இன்னம் 15 ஆயிரம் குதிரை சக்தி யுள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். வேறு கவர்ன் மெண்டின் உரிமையையும் வேறு மிராசுதார்களின் பாதயம் களையும் சௌகர்யங்களையும் பாதிக்கக்கூடியதாகிய பிரு மாண்டமான வேலையை ஆரம்பிக்கையில் நன்றாய் ஆலோ சித்துச் சம்பந்தப்பட்ட எல்லோருடைய சம்மதத்தையும் பெற்றே தொடங்கியிருக்க வேண்டும். தங்களுடைய திட் டத்தை அங்கீகரிக்கும்படி முடிவில் செய்து விடலாமென்ற நம்பிக்னகயுடன், எப்படியாவது வேலையைச் செய்து முடி த்து விடுகிறதாக மைசூர் கவர்ன்மெண்டார் தீர்மானித்து விட்டார்கள் போல் தோன்றுகிறது. அணை வேலையின் பொரு ட்டு இதுவரையில் 43 லட்சம் ரூபாய் செலவாய்விட்டது. (1) அமராவதி:- இது ஆனை மலையில் உற்பத்தியாகி கோயமுத்தூர் ஜில்லாவில் சுமார் 140 மைல்கள் தூரம் ஓடிக் காவேரியோடு சேர்கிற ஒரு பெரிய உபாதி. (2) பவானி:-இது முத்தி குளம் முதலான மலை களில் உற்பத்தியாகிக் கோயமுத்தூர் ஜில்லாவில் ஓடி, காவேரியோடு சேர்கிற ஒரு உபாதி. 3) கொய்யல்:- இது வெள்ளிங்கிரி மலையில் உற் பத்தி பாகிக் கோயமுத்தூர் ஜில்லாவின் வழியாய்ச் சுமார் 108 மைல்கள் தூரம் ஓடி, காவேரியில் கலக்கிற ஒரு உபாதி. (4) திறமணிமுத்தாறு:- இது சேர்வகிரி மலையில் உற் பத்தியாகிச் சேலம் ஜில்லாவின் வழியாய் ஓடிக் காவேரியில் கலக்கிற பாதி. இவைகளன்றியில், (5) மாயாறு:-இது நீலகிரி மலையில் உற்பத்தியாகி வடக்காக ஓடிப் பவானியில் சேர்கிறது. (6) வடபெண்ணை யென்னும் பினாகினி : -- இது மைசூர் மலைகளில் உற்பத்தியாகித் தென்னாற்காடு கடப்பை கர். நால் பல்லாரி ஜில்லாக்களின் வழியாய் 350 மைல் தூரம் இடி வங்காலா விரிகுடாவில் விழுகிறது. செய்யாறு, பாபாக் கினி, சித்திராவதி என்பவை இதன் உபா திகள்.