பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் (7) தென்டெண்ணை:-மைசூர் இராஜ்ஜியத்தைச் சார் ந்த நந்தி வர்க்கத்தில் உற்பத்தியாகி அந்த ராஜ்ஜியத்திலும் தென் ஆற்காடு ஜில்லாக்களிலும் பாய்ந்து கூட இருக்கரு கில் வங்காளாக்குடாக்கடலில் விழுகிறது. (S) பாலாறு:-மைசூர் ராஜ்ஜியத்தைச் சார்ந்த நந்தி தர்க்கத்தில் உற்பத்தியாகி அந்த ராஜ்ஜியத்திலும் வட ஆற்காடு செங்கற்பட்டு வேலூர் ஜில்லாக்களின் வழியாய் 230 மைல்கள் ஓடி வங்காளாக்கடலில் விழுகிறது. (9) கூவம் அடையாறு:- சென்னப்பட்டணத்திலும் செங்கற்பட்டிலும் ஓடுகின்றன. வெய்யில் காலத்தில் ஜலம் வற்றிப் போகும். (10) வெள்ளாறு:- கடலூர் ஜில்லாவில் ஓடி கூட லூருக்கருகில் கடலில் விழுகிறது. இதன் நீளம் 15 மைல், (1) வைகரையாறு:- மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மதுரை வழியாக ஓடிக் கடலில் விழுகிறது. (12) பொன்னானி:- ஆனை மலையில் உற்பத்தியாகி மலையாளம் ஜில்லா வழியாய் ஓடிப் பொன்னானி என்னும் துரை முகத்துக்கருகில் சமுத்திரத்தில் விழுகிறது. (13) தாம்பிரவர்ணி:- இது சென்னிறமான பூமியில் ஓடுகிறபடியால் இதற்கு இப்பெயர் வந்தது. இது குற்றாலம் பாபவிநாசம் என்னும் இடங்களில் ஆகாச கங்கையாய் விழுந்து திருநெல்வேலி பாளையங்கோட்டை வழியாய் 80 மைல்கள் ஓடிக் கடலில் விழுகிறது.