சிறப்புரை தமிழ் நாட்டில், எழுத்தாளர் "சோமலெ "சோமலெ " அவர்களை அறியாதவர் இல்லை. தமிழ் வளம் பெற பணிபுரியும் நல்ல தாண்டர் இவர். இவர் எழுதிய நூல்கள் பல முன்னரே வெவளிந்துள்ளன. பிறர் அரிதாக எழுதும் துறைகளில் இவர் நுழைந்து சிறந்த நூல்களை எழுதி அளித்துள்ளார். டம் 39 125 இவர் இப்போது எழுதிவரும், தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் வரலாற்று வரிசையில் ‘“தஞ்சாவூர் மாவட் என்னும் இந்நூல் வெளிவருகின்றது. தமிழ் மொழி யில் இத்தகைய நூல்கள் செவ்விய முறையில் வெளி வருதல் இதுவே முதன் முறையாகும். தஞ்சை மாவட்டத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒருவாறு அறிய விழை வோர்க்கு இந்நூல் பெரிதும் துணைபுரிகின்றது. . சோழ வளநாடு சோறுடைத்து ; தண்ணீரும் காவேரி, தார்வேந்தனும் சோழன், மண்ணாவதும் சோழ மண்டலமே, என்றெல்லாம் பேசப்படும் சோழநாட்டின் சிறந்த பகுதி தஞ்சை மாவட்டம். தஞ்சை மாவட்டத்தைத் தென்னிந்தி யாவின் நெற்களஞ்சியம் என்ற அளவில்தான் பொதுமக்கள் அறிவர். இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போரும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும் ஒருங்கே வாழ்கின்ற இடம் இம் மாவட்டமாகும். பசி நடக் காமல் ஏர் நடக்கும் இம்மாவட்டத்தில், இயல் இசை நாட கம் நடந்தன ;சீர் நடந்தன ; திறம் நடந்தது; திருவறத் தின் செயல் நடந்தது; பார் நடந்தது; படை நடந்தது. வீரச் செருக்கால் வெளிநாடுகளை வென்றும், வாணிபப் பெருக்கால் உலக நாடுகளுடன் உறவு கொண்டும், கலைச் செல்வத்தால் எல்லா மக்களுக்கும் இன்பத்தை வழங்கியும் இம் மாவட்டம் சிறப்புற்றது. அரசியல் வரலாறு, சமய வர லாறு, பண்பாடு, நாகரிகம் ஆகிய பல தனிச் சிறப்புக்கள் இம்மாவட்டத்திற்கு உண்டு. இன்றைய அரசியல் வல்லுநர் களும், ஆட்சித்தலைவர்களும் வியக்கும் வண்ணம் நாட்டின் ஆட்சி முறை பண்டைக் காலத்தில் இங்கு இயங்கியது. நீர்வளம், நிலவளம், கடல்வளம், கனிவளம், காட்டு வளம் ஆகிய இயற்கை வளம் இங்கு மிக்குள்ளன. சிற்பம்,
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/3
Appearance