உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஓவியம், இசை முதலிய கவின்கலைகளுக்கும், கைத்திறத் தொழில்களுக்கும் தஞ்சை மாவட்டமே தாயகமாகும். புலவர், புரவலர், அறிஞர், வீரர், கவிஞர், கலைஞர், துறவி கள், அடியார் பலரையும் ஈன்றெடுத்து இம்மாநிலம் உல கிற்கு வழங்கியுள்ளது. சைவம் வைணவம், பௌத்தம், சமணம், அத்வைதம் முதலிய சமயங்கள் வளர்ந்த இடம் இங்குதான். இன்றும் தமிழ் மணம், தெய்வ மணம், கலை மணம் கமழும் நிலைக்களம், இதுதான். சென்ற தேசவிடுதலைப் போரில் இம்மாவட்டம் பெரும் பங்கு எடுத்துக் கொண்டு சிறந்த தொண்டாற்றியுள்ளது. பண்டைப் பெருமைக் கேற்ப இன்றைய நாளிலும் அரசியல் துறைகளிலும், விடுதலையடைந்த நாட்டின் முன்னேற்ற ஆக்க வேலைகளிலும், வட்டார வளர்ச்சியிலும் இம்மாவட்டம் முன்னணியில் நிற்கின்றது. பல ஊர் இவை போன்ற பயன்தரும் செய்திகளையும் மாவட்டத் திற்கான தேவைகளையும் ஆசிரியர் இந்நூலில் ஆங்காங்கே சுவையுடனும், வேண்டும் அளவும் எழுதியுள்ளார். நம் நாட்டிலுள்ள ஊர்களுக்கு, இடைக்காலத்தில் தலபுராணங் கள் எழுதத் தொடங்கியதின் விளைவாகப் பல ஊர்களின் உண்மைப் பெயர்களும், வரலாறுகளும் மறைந்தொழிந்தன. இந்நிலையில் ஆசிரியர் இம்மாவட்டத்திலுள்ள களின் உண்மைப் பெயர்களையும், வரலாறுகளையும் ஆராய்ந் தறிந்து இந்நூலில் தருகின்றார். இக்காலத்தில் வெளியாகும் நூல்களில் பல, கொச்சைச் சொற்களால் எழுதப்பெற்றும், இலக்கணப் பிழைகள் மலிந்தும் காணப்படுகின்றன. அவை போல் அல்லாமல் இந்நூல் இனிய செந்தமிழில், எளியநடை யில் வெளிவருவது பாராட்டற்குரியது. இந்நூலாசிரியருக்குத் தமிழ் கூறு நல்லுலகும் சிறப் பாகத் தஞ்சை மாவட்டமும் என்றும் கடப்பாடுடையன. தஞ்சை வரலாறு தந்தான் இலக்குமணன் செஞ்சொல் தமிழில் தெரிந்து. மதுரை, 22-11-1961. S.இராமச்சந்திரப் பத்தர் டெப்டி கலெக்டர்