உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பிறப்பாலேயே போர் வீரனாகப் புகழ்பெற்ற எக் கோஜி தஞ்சைக் கோட்டையை பலப்படுத்தினான். பிற் காலத்தில் வேளாண்மைத் தொழிலுக்கு ஆக்கம் தந் தான். கல்வித்துறைக்கு ஊக்கம் அளித்தான். அவன் மகன் ஷாஜியும் அறிவுத் துறையில் ஆர்வம் காட்டினான். கலைவளர்த்த காவலன் சரபோஜிக்கு முன்னோடியாக அமைந்தவன் இந்த ஷாஜியே ஆவான். ஷாஜி கவிஞனா கவும் இசைப்புலவனாகவும் அறச் செயல் பல செய்த அரசனாகவும் விளங்கினான். அவன் தம்பியான முதலாவது சரபோசி (1712- 1728) இராமநாதபுரம் அரசரை அடக்க, சிவகங்கை ஜமீனை உண்டாக்கினான்; பட்டுக்கோட்டை அறந்தாங்கி வட்டங்களில் சேதுபதியின் செல்வாக்குக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அவனுக்குப்பின் பட்டத்துக்குவந்தவன் அவனுடைய இளவலான துக்கோஜி. மாரியம்மன் கோயிலைக் கட்டி யதும் இந்துஸ்தானி இசையைப் பரப்பியதும் இவன் செய்த இருபெருஞ் செயல்கள் எனலாம். "பட்டத்துக்கு உரியவர் யார்?" என்ற போட்டா போட்டி இவனுக்குப் பின் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு நிலவியது. பிரித் தாளும் கொள்கையில் ஊறித்திளைத்த பிரிட்டிஷார் தஞ் சையில் ஊன்றிக்கொண்டனர். 1773 முதல் 1776 வரை கர்நாடக நவாபு தஞ்சையை ஆள ஆதரவு காட்டியயும் பிறகு மஹாராஷ்டிர மன்னர்களுக்கு ஆளும் உரிமை உண்டு என்று அறிவித்தும் தந்திரத்தாலும் படை வலு வாலும் தம் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொண் டனர். மஹாராஷ்டிர அரச குடும்பத்தினருள் பட்டத்து உரிமை யாருக்கு என்பது ஒரு சிக்கலாகவே இருக்கும் படி நிலைமை நீடிக்கப்பட்டது.