உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கர்நாடக நவாபுக்கு ஆபத்துக் காலங்களில் தஞ்சை மஹாராஷ்டிர அரசர்கள் உதவி செய்தனர். ஆனால் நன்றிகெட்ட நாவபு 1773-இல் தஞ்சையைப் படையெடுத் தான். அவன் செயலுக்கு, சென்னையிலிருந்த ஆங்கிலேய அலுவலர் உடந்தையாக இருந்தனர். இதை ஸ்குவார்ட்ஸ் பாதிரிவாயிலாகச் சீமையிலுள்ள பெரிய அலுவலர்கள் அறிந்ததும் கர்நாடக நவாபிடமிருந்து 1776 இல் தஞ் சையை மீட்டுக்கொடுத்தனர். கவர்னர்மீது அதிகாரம் செலுத்துவதற்கு வழிசெய்யும் "ரெகுலேட்டிங் ஆக்ட்' இந்நிகழ்ச்சியாலேயே ஏற்பட்டது. கவர்னர் பிகாட்டும் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.* இதிலிருந்து துளஜா மன்னர்க்கும் ஆங்கிலேயர்க்கும் நல்லுறவு உறுதிப் பட்டது. அதன்பயனாக 1798-இல் இரண்டாவது சர போசி தஞ்சையின் அரசன் ஆக்கப்பட்டான். ஆனால் அதிகாரம் அனைத்தும் ஆங்கிலேயரால் பிடுங்கிக்கொள் ளப்பட்டது. சரபோஜி அரசன் என்று அழைக்கப்படும் உரிமை மட்டுமே சரபோசிக்கு இருந்தது. அரண்மனைக்கு அப்பால் அணு வளவும் அதிகாரமில்லாதிருந்த சரபோசி அரசியலில் தான் அடைந்த அளவு கடந்த ஏமாற்றத்தை மறந்து இலக்கிய உலகிலும் இல்லற இன்பத்திலும் மூழ்கினான். பல்லாயிரம் நூல்களும் ஓர் அரசியும் பணிப்பெண்கள் பலரும் அவன் வாழ்க்கைத் துணைவராயினர். அரிய பல் ஐரோப்பிய அறிஞரிடம் அவன் கல்விபயின்றான். கலைச் செல்வனாகவும் பன்மொழிப் புலவனாகவும் இசை ஆராய்ச்சியாளனாகவும் மருத்துவக்கலை ஆர்வலனாகவும் விஞ்ஞானத்துறையில் வியத்தகுநாட்டமுடையவனாகவும் சரபோசி விளங்கினான். சரசுவதி மகாலை மிகச் சிறந்த ஆதாரம்: Tanjore Papers, 3 vols.