உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாடெங்கும் அடுத்த பல ஆண்டுகளுக்குப் பங்கீட்டு முறையும் கள்ளமார்க்கட்டும் நிலவியதாலும், தஞ்சை மாவட்டம் பிரிட்டிஷ் ஆட்சியின் அந்திமாலையில் செல்வச் செழிப்பில் திளைத்தது. உரிமைக்குப் பின் உரிமைபெற்ற இந்திய நாட்டில், வளர்ச்சித் திட்டங் கள் உணவு தன்னிறைவுக் குறிக்கோளைக் கொண்டிருக் கின்றன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் வேளாண் மைத் தொழிலுக்கு ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி நிலையங்கள் தோன்றியுள்ளன. "பாக்கேஜ் ஸ்கீம்" போன்ற புதிய திட்டங்கள் பரவி வருகின்றன. உழுபவனின் உரிமைகள் பேணப்படுகின்றன. பலர் நிலங்களை விற்றுவிட்டுச் சென்னைக்கும் அதற்கப்பாலும் சென்றுள்ளனர். வேளாண்மை வருவாயில் உரிமையாள ருக்கு 60 பங்கும் உழவனுக்கு 40 பங்கும் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது. நில உடைமைக்கு உச்சவரம்பும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விளை வாக நிலங்கள் கைமாறியுள்ளன. சமூக வாழ்க்கையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல்வி நிலையங்கள் பெருகி வருகின்றன. கலைத்துறை யில் மறுமலர்ச்சி காணப்படுகிறது. புத்தம்புதிய தொழில் கள் தொடங்கப்பட்டு வருகின்றன. புயலால் பாதிக்கப் பட்ட மீன்பிடிக்கும் தொழிலும் தென்னைத் தோட்டத் தொழிலும் புத்துயிர்பெற்றுப் பொலிவுடன் வளர்ந்து வருகின்றன. இம்மாவட்டம் இழந்த பெருமையை மீண் டும் பெறுவதற்கான முன்னேற்றப்பாதையில் முதல்படி எடுத்துவைக்கிறது. 5. வாழும் மக்கள் தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தொகை 1961- இல் நடைபெற்ற கணக்கெடுப்புப்படி 32,49,960 ஆகும்.