உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பல சமயத்தவர் பல சாதியினர் இங்கு வாழ்கின்ற னர். இவர்கள் அனைவரையும் பற்றிக் கூற இயலாது. இம்மாவட்டத்துக்கே சிறப்பாக உள்ள சில சமூகத்தின ரைப் பற்றிய செய்திகளைத் தெரிவிப்பதே நமது நோக்கம். மராட்டியர் தஞ்சை மாவட்டத்தில் மராட்டியர் 15,000 பேர் வாழ்கின்றனர். தமிழ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகை யாக இவர்கள் உள்ள மாவட்டம் இதுவே. இந்நிகழ்ச் சிக்குக் காரணம் 1675 முதல் 1855 வரை தஞ்சையில் மராட்டியரின் ஆட்சி நடைபெற்றதாகும். மராட்டிய மன்னர்கள் இங்கு வந்தபோது போர்ப் படையினராகவும் அறுசுவை யுணவு ஆக்குவோராகவும் கணக்கர்களாகவும் தம் நாட்டினரை அழைத்து வந்தனர். அவர்கள் தஞ்சை கும்பகோணம் நகரங்களில் அரச குடும்பத்தையொட்டி வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் ஆட்சி அவர்களிடமிருந்து அயலவர்க்கு மாறியதால், மராட்டியர் ஆற அமர வாழ்ந்த நிலையைக் கைவிட்டு வாழ வழி தேட வேண்டுவதாயிற்று. இன்றும் இவர்கள் பெரும்பாலும் தஞ்சை, குடந்தை நகர்களி லேயே வாழ்கின்றனர். இவர்களுக்கென மராத்திய மொழி புகட்டும் உயர்நிலைப் பள்ளியும் தனி மயானங் களும் (கோரிக்குளம்) உள்ளன. சிலர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கலைஞர்களாகவும் சிறந்த இதழ்களை வெளியிடும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். சுவையான இறைச்சி உணவு சமைப்பவர் கள் இவர்களுள் உண்டு. தமிழ்நாட்டில் பல இடங்களில் இவர்கள் 'மராட்டா ஓட்டல்' என்னும் உணவு விடுதி களை நடத்தி வருகின்றனர். வாழை நாறுகளையும் தேங்காய் நாறுகளையும் மென்மையாகப் போட்டுக்