38 கோளாவைக் கட்டி அதில் நெய் ஊற்றிச் சமைத்து, அந்த உருண்டை பிதிர்ந்துவிடாமல் இவர்கள் செய்யும்
- கயிறுகட்டி கோளா', குறிப்பிடத்தக்க ஓர் உண
வாகும். தஞ்சாவூர் ரசமும் கத்திரிக்காய் கொத்சும் இவர்களுடையே படைப்புக்களே. மராட்டிய நாட்டில் இவர்கள் வேறுபட்ட சாதி களைச் சேர்ந்தவர்களாக இருந்தும், வெளி மாநிலத்தில் வந்து நிலைத்துவிட்டபடியால் இவர்களுக்குள் இருந்த இன வேறுபாடுகள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. ராயர்கள், ராவ்ஜிக்கள் எல்லோருமே 'தேசாஷ்டர்" என்ற பொதுப் பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். வீட்டில் மராத்தி மொழியை ஓரளவு பேசிய போதிலும் இவர்கள் அனைவரும் தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உடைய வர்களாக உள்ளனர். G ராவ்' என்ற இறுதிப் பெயரை இப்போது பலர் போட்டுக் கொள்வதில்லை. 'பான்ஸ்லே', 'சோமசின்ஹா' போன்ற குடும்பப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்க மும் குறைந்து வருகிறது. போர்ப்படையிலும், மோட் டார் கார் செப்பனிடுவது போன்ற தொழில்களிலும் தஞ்சை, கும்பகோணம் மராத்தியர் சிறந்து விளங்கு கின்றனர். கடம்பூர் போளி, காஞ்சிபுரம் இட்டலி, சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சு, மணப்பாறை முறுக்கு என்பன போன்று தஞ்சை மாவட்டத்துக்கே தனி உரிமையான உணவுப் பொருள்கள் உண்டு. கொள்ளிடம் சுண்டல், பேரளம் வடை, தஞ்சாவூர் ரசம், கயிறுகட்டிக் கோலா ஆகியவை அவ் வகையைச் சேர்ந்தன. 'கொத்தமல்லி சட்டினியும் கத்தரிக்காய்க் கொத்சும் இட்லி தோசைக்கு உப சாதகம்' என்பது தஞ்சை மக்களின் உணவு முறையைத் தெரிவிக்கும் பழமொழியாகும்.