உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கும்பகோணத்தில் வாழ்ந்த மாராட்டியருள் டி. மாதவராவ், திவான் பகதூர் ரகுநாதராவ், வேங்க சாமி ராவ், கோபால் ராவ், இங்கிலீஷ் சுப்பராவ் ஆகியோர் பல இந்திய மன்னர்களிடம் திவானாகவும் பிற உயர் அலுவலர்களாகவும் இருந்து பெரி தும் மதிக்கப்பட்டனர். கள்ளர் தஞ்சை மாவட்டத்தில் இவர்கள் தொகை, 30,000க்கு மேலிருக்கலாம். இவர்கள் தங்களைச் சோழர் வ யினராகக் கருதுகின்றனர். வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு இப்போது வளமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஆண்மக்கள் தங்கள் வலிமை யைப் போரில் காட்ட ஆசைப்பட்டனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், போரிடுதலே இவர்களுக்குத் தொழிலாகவும் பொழுது போக்காகவும் இருந்தது. பல்லவர் படையிலும் சோழர் படையிலும் இவர்கள் பணியாற்றியுள்ளனர். அந்த அரசர்கள் வழங்கிய பட்டங்கள், இன்றும் பட்டம் பெற்றவர்களின் வழிவழி வந்தவர்களால் போட்டுக் கொள்ளப்படுகின்றன. இக்காலத்தில் வழங்கிவரும் பட்டங்களின் எண்ணிக்கை 330 இருக்குமென்று தமிழ்ப் பெரும் புலவர் வேங்கடசாமி நாட்டார், 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலில் குறிப்பிட் டுள்ளார். இப்பட்டங்களில் சில வருமாறு : கொற்றப் பிரியர் பொறை பொறுத்தார் மானங்காத்தார் மேற்கொண்டார் வாண்டைப் பிரியர் வீரப்புலியர் வாள் வெட்டியார் வேலுடையார் களத்தில் வென்றார் சிறை மீண்டார் சென்னை ஆண்டார் ராஜாளியார் அஞ்சாத சிங்கம்