உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 இவனைப் பல்லவ குலத்தினர் என்பர் ஆராய்ச்சியாளர். அது தவறு. ஒரு குடியைச் சேர்ந்தவன் பல குலத்தார் களுக்குத் தலைவனாக இருந்ததற்குச்சான்று விக்கிரம சோழன் உலா 328-ஆம் கண்ணி-மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும் கூடற்குங் கோழிக்குங் கோமானே - என்றதில் காண்க. இவ்வழக் கத்தைப் பற்றி ரா. இராகவ அய்யங்கார் 'வஞ்சி மாநகர்' என்ற புத்தகத்தில் எழுதியிருப்பது கவனிக்கத்தக்து. பழங்குடி மக்கள் தமிழ்நாட்டிலேயே முன்னேற்றமும் கல்வி வளர்ச்சி யும் அடைந்துள்ள மாவட்டமாகிய தஞ்சையில் பழங்குடி மக்களும், பள்ளிப் படிப்பில்லா மக்களும் கூட வாழ்கின் றனர். சோறுடைத்த சோழநாட்டில் சோறு உண்ணாத வர்களும் உள்ளனர். இவர்கள் வாழும் இடம் கோடியக் காடு எனப்படும். கோடியக்காடு, திருத்தருப்பூண்டி வட்டத்தில் வேதாரணியத்துக்குத் தெற்கே இருக்கிறது. 10 கி.மீ. நீளத்துக்கும் 5 கி. மீ. அகலத்துக்கும் அடர்ந்துள்ள இக் காடு இரு மருங்கிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றிலும் உவர் மண் இருக்கிறது. மழை குறை வாக இருப்பதால், நீண்ட அகன்ற இலையுள்ள மரங்கள் இங்கு வளருவதில்லை. பாலைப்பழம், துவரம்பழம், கொழுஞ்சிப்பழம் போன்ற சில காட்டுப் பழங்களும், கீரை கிழங்கு வகைகள் சிலவும், சீந்தில் கொடி என்னும் மூலிகையும், கோழி ஆவரை என்ற கொட்டையும், பூனைக் காய்ச்சிக் கொட்டையும் முட்புதர்களும் இக்காட்டில் மண்டிக் கிடக்கின்றன. ஆவர். 3 இங்கு வாழும் பழங்குடி மக்கள் 'சீந்தி வலையர்' காட்டிலுள்ள சீந்திக் கிழங்குகளைத் தோண்டி