உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 யெடுத்துத் தின்றும் கடல் மீனைத் தின்றும் வாழ்வதால் இவர்கள் இவ்வாறு பெயர் பெற்றனர். இக்காட்டில் இவர்கள் 1.75பேர் (35 குடும்பங்கள்) உள்ளனர். இந்த இனத்தவர் முத்துப்பேட்டைக் காடுகளிலும் உள்ளனர். இவர்களுக்குச் சொந்தமான நிலம் கிடையாது; உழவுத் தொழிலும் இவர்களுக்குத் தெரியாது. விறகு விற்றும், காடுகளில் சாணமும் சருகும் சேகரித்துப் புகையிலைக் கொல்லைக்கு உரமாக விற் றும், மீன்பிடி வலைகள் செய்தும் இவர்கள் பிழைக்கின் றனர். பொருளாதார நிலை மிகக் கீழ்ப்பட்டதாக இருப் பதால், எப்போதாவது ஒரு சில நாட்களில்தான் இவர் கள் அரிசி வாங்கிச் சோறு வடிக்கின்றனர். பால், மோர் என்பவற்றை இவர்கள் கண்டதில்லை எனின், உண்ட தில்லை என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. முன்னடியன், வீரன், காளி, தூண்டிக்காரன் என்ற கடவுளரை இவர்கள் வழிபடுகின்றனர். காந்தி நினைவு நிதியினர் இவ்வினத்தவரின் குழந்தை களுக்கென உணவு விடுதியும் பள்ளிக்கூடமும் கோடிக் கரையில் சில காலம் நடத்தி வந்தனர். முஸ்லிம்கள் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் வட்டங்களில் முஸ்லிம்கள் தொகையாக உள்ளனர். இவர்களுள் அரேபியாவிலிருந்து வந்த வணிகர் லப்பை அல்லது சோணகர் எனப்படுவர். மரக்கலம் செலுத்தியவர் மரக்காயர் எனப்படுவர். இரு பிரிவுகளிலும் தமிழ்நாட்டு வாழ்நராக இருந்து இஸ்லாமியர் ஆனவர் உள்ளனர்.