பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

சோலை சுந்தரபெருமாள்


தவிக்கும். தப்பித் தவறி மேல பட்டுட்டா ‘என்னத் தொடாடீ’ மா எனக்கு “மதர் அலர்ஜி” அப்புறம் செறுமி செறுமிண்டு மூச்சு வாங்கும் அப்படின்னு சொல்லும் குழந்தை!

ராகவன் என்ன ப்ராடெக்ட்னு லோச்சனாவுக்கு எப்பவும் தெரிந்ததேயில்லை. எப்பப் பார்த்தாலும் கட்டில்ல போட்டு படுக்க வச்சு வியாதி, வியாதின்னு மூலையில உக்காத்தி வச்சப்போதான் ராணிக்கு தான் ராணி இல்லைன்னு புரிஞ்சுது. பால் முத்து மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப்புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கலில் பிழிந்துவிடும் போதெல்லாம் நெஞ்சுக்குள்ளிருந்து பயம் வெளியே போய்க் கொண்டிருந்தது. மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக்கட்டி பாலை முறித்த போது அவளுக்கு உயிரே போனது போல் ஆயிற்று. கொல்லைப்புறத்து இடிந்த சுவர் செங்கல்லைப் பார்க்கும் போதெல்லாம் அது கதறுவது கேட்டது. லோச்சனாவுக்கு மிச்சமிருந்தது வெட்கம் ஒன்றுதான். ராகவன் ஒரு நாள் கேட்டான், “உனக்கு எதுக்கடி கொழந்தை?” பேச முடியவில்லை அவளால். எப்போதும் சுவற்றோரமாகத் திரும்பிப் படுத்துக்கிடப்பாள். எவ்வளவு நேரம் தூங்க முடியும்! யாரும் அவளை வேலை செய்ய விடுவதில்லை. சுவற்றை நகத்தால் கீறி சுவற்றுக் காரையை உதிர்த்துக் கொண்டிருந்தாள் லோச்சனா. காரை உதிர்ந்த இடம் ராகவனைப் பயமுறுத்தியது.

“என்னடீது? செவுத்துல ரெண்டு கண்ணு வரைஞ்சு வச்சுருக்கிறே? எப்படி முழிக்குதுன்னு பாரேன்!” என்றான். அப்போது தான் லோச்சனம் தான் பண்ணிக் கொண்டிருந்த வேலை என்னவென்று பார்த்தாள். உண்மைதான்! சுவற்றிலிருந்து இரண்டு காளியின் கண்கள் அவளையே நோக்கி இமைச்சுடர் இரத்தம் சிந்த மூடி மூடி விழித்தன. அவளா இதை சுவற்றில் கீறினாள்!! ஆச்சரியம்! வர்ணங்கள் யார் பூசியது! அந்த இரண்டு விழிகளும் கண்ணீரில் நனைந்திருந்தன. இப்போது அந்த விழிகள் அவளையேப் பார்த்து மூடி மூடி, விழித்தன. அந்தக் கண்களுக்குள் அந்த உயிர் லோச்சனத்துக்கு வியப்பாய் இருந்தது. அன்றைக்குத் தான் லோச்சனத்துக்கு உயிர் வந்தது. படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள். உடலெங்கும் தடிப்பு தடிப்பாய் வரும் அலர்ஜி. வெள்ளையாய் திட்டுத் திட்டாய் ரோஸ் நிறத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தீவு தீவாக, படலம் படலமாக, கைகளிலும், கால்களிலும் தொழுநோய் அவளை சீராட்டத் தொடங்கியது. திருவையாற்றுக்குப் போய் குப்பி குப்பியாக கலர்கள் வாங்கி வந்தாள். உடல் முழுதும் ஃபிரஷை வர்ணத்தில் தோய்த்து கைகளிலும், கால்களிலும் இலைகளும், கனிகளுமாய் வரைந்து தள்ளினாள். நகங்களின் விளிம்புகளிலெல்லாம் பொன்