பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

273


சொல்றது?"ன்னு கத்திக்கிட்டே அவ கூடவே வந்து குதிச்சானுவ. ராணிக்கிட்டப் பேச முடியுமா? லோச்சனா நெனைச்சா நெனைச்சதுதான்! ராகவன் சொன்னான். “உன்னப் பாத்து எல்லாரும் பயப்படுறா"ன்னு - பொறப்புட்டுட்டாள் லோச்சனா, அம்மா, அப்பா எல்லாம் போகாதடி போகாதடி ன்னு பின்னாலேயே ஓடி வந்தார்கள். “மெட்ராசுக்குப் போய் Specialist கிட்ட போயி ஒசத்தி வைத்தியம் பாத்துக்கலாம். அஞ்சினிக்கல்லாம் போகவேண்டாம். என்ன இருக்குன்னு அங்கேப்போறே? யார் இருக்கா ஒன்னெ அங்கப் பாத்துக்க? தன்னந்தனியா பேய் மாதிரி அஞ்ச புளியமரத்துல ஏற வேண்டியதுதான். சொல்றத கேளு”ன்னு அப்பாக்கூட சொன்னார். ராணிக்கு சொல்லச் சொல்ல மூர்க்கம் தான் ஏறித்து. அவளுக்கு மனசிலே தான் வியாதி. சொல்லப்போனால் எந்த வியாதியும் மனசுலதான் தொடங்குது. உடம்புல தான் முடியிறது. உடம்பு லோச்சனாகிட்ட பேசும்போது அவளால் என்ன பண்ணமுடியும்? அவள் நெஞ்செல்லாம் நோயாக நிரம்பியிருந்தவள் அவள் மகள் மைத்ரேயி உள்ளுக்குள் மட்டுமில்லாமல் அவள் உடம்பெல்லாம் சிவப்பும், வெள்ளையுமாய் பரவியிருந்தன. அது நோய் இல்லையென்று யாருக்குப் புரியப்போவுது. தன்னந்தனியோ லோச்சனா மைத்ரேயிவுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறாள். இரண்டு கரிய பரிசல்காரர்களிடையே தலையில், தோள்களில் மூட்டைகளுடன் நீந்துவது ஒரு சிரமமாகத் தான் இருந்தது. சென்னையிலோ, டெல்லியிலோ ஏதோ ஒரு சானிடோரியத்திலோ லெப்ரசிகேர்ஹோமிலோ தனிப்பட்ட டாக்டர்களிடமோ வசதியாக சிகிச்சை பெற முடியும். “மைத்ரேயி?” மனதெல்லாம் ஒரு ஆங்காரம். மூளையிலெல்லாம். ஏதோ ஒரு கனல், உடலெல்லாம். ஏதோ ஒரு தேவை. இதை மருந்து கொடுத்தோ, சிகிச்சை செய்தோ ஒடுக்க முடியாது. தன்னந்தனியே அவன் தன்னுடனேயே போராடினாள். ராகவன் அவளைப் புறக்கணிக்கவில்லை. அவளை விட்டு ஓடித்தான் போனான். அதனால் தான் ராணி எல்லோரையும் புறக்கணித்துவிட்டு அஞ்சினிக்குப் புறப்பட்டுவிட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம்தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. “ஏம்மோவ்? சுழி வருது கழி! ஜாக்ரதை அடிச்சு நின்னுங்க! காலை ஒதஞ்சு நின்னுங்க. அய்யிருவூட்டு ஆயி?!! இழுப்பு சொயட்டும்! அடிச்சு நின்னுங்க்?”ன்னு கத்தினான் சாம்பனும், கலியனும், சலப்சலப்பென்று இரண்டு ஆளை வாய்ச்சுழிகள் பேய் வேகத்துடன் லோச்சனாவின் குறுக்கில் கடந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த மூட்டைகள் பற்சக்கரத்தில் சிக்கியது போல் சுழண்டு சிதறின. “அய்யோ!” என்று அலறல் சாம்பனிடம் இருந்து கிளம்பியது. கலியனைக் காணோம். நீர் யானை ஒன்று