பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

சோலை சுந்தரபெருமாள்


இல்லையம்மா, உன்னுடைய Society தான் உன்னை ஒதுக்கி இருக்கு. நீ தான் அதை ஒதுக்கிட்டியே?” என்றார்கள். அன்றிலிருந்து அவள் கித்தான்கள் அவளோடு பேசத் தொடங்கின. லோச்சனாவின் காளிகள் கலகலவென்று சிரித்து அவளுடன் கைகோர்ந்து விளையாடிக் களித்தன. அவளது பிறக்காத குழந்தைகள் அவள் கர்ப்பப்பையை அறுத்துக் கொண்டு, அவளை ஓடி வந்து தழுவிக் கொண்டு, அவள் மார்புகளில் ரத்தத்தைப் பாய்ச்சின. நரம்புகளில் உயிரைப் பெய்தன.

லோச்சனா தன்னந்தனியே புறப்பட்டாள் ராகவன் அம்மா, மாமியார், அப்பா, மன்னி, குழந்தை, மச்சினர்கள் எல்லாம் தடுத்துக்கூட புறப்பட்டுவிட்டாள். வானம், கனவு போல் சிரித்த கர்ஜித்த ஒரு மாலை வேளையில் அஞ்சினி என்னும் பூர்வீக அக்ரஹாரத்துக்கு காவிரியாற்றுக்கப்பாலிருந்த அந்தத் தீவுப் பிரதேசத்துக்குப் புறப்பட்டுவிட்டாள். ராகவன் அவளைத் தடுக்க முயன்ற போதும் சிரித்தாள் ராணி!

தவளைகள் சப்தம் அலை அலையாய் கிளம்பிய அஞ்சினியின் காவிரியை அந்த ராத்திரி வேளையில், பரிசலில் தாண்டிப் போக, மூட்டையோடு அவள் இறங்கிய போது “அய்யிரு ஆட்டுப் பொண்ணு இப்படி தனியா வந்திருக்குப் பாருங்கடா”ன்னு குசுகுசுத்துவிட்டு நின்னானுவ பரிசல்காரப் பயலுவோ!

“அஞ்சினிக்குப் போவணும்பா.”

“ஆத்துல இழுப்பு சாஸ்த்தியா இருக்குங்க! தண்ணி வேற ஏறுது”

“அக்கரைக்கி அக்ரஹாரத்துக்குப் போவணும்! எத்தனையானாலும் தாரேன்!”

“காசுக்கென்னம்மா?! வெள்ளைய்யர் ஆட்டுப் பொண்ணு தானம்மா நீங்க!? தண்ணி சாஸ்த்தியா போய்கிட்டு இருக்கு! கொறையட்டும்! ராத்திரியெல்லாம் கோரையாத்து பரிசத் தொறையிலியே கொட்டு கொட்டுன்னு முழிச்சிட்டு ஒக்காந்திருந்ததுல நேரம் போனது தெரியவேல்லியா? கெழக்க செவப்பா பூதம் ஏந்திரிச்சிது! வெள்ளையா, ஆறு, கடல், மலையா உருண்டு உருண்டு வருது. அஞ்சினி புளியமரமெல்லாம் தண்ணீல நிக்கிதுவ. பரிசக்காரனுவ பரிசலை களத்தி போட்டு மேட்டுல உக்காந்திருக்கானுவோ? காலை வெய்யில்ல ஆத்து வெள்ளத்துலெ எங்கிருந்த குடிசை கூரையெல்லாம் பிச்சிகிட்டு மிதந்துகிட்டு வருது. சாமான்களையெல்லாம் தலையில தூக்கிகிட்டு எதையும் லட்சியம் பண்ணாமே அஞ்சினியை நோக்கி எறங்கப்போன அவளை பரிசக்காரனுவோ கூப்பாடு போட்டு தடுத்தானுவோ! ‘வெள்ளான அய்யரு ஆட்டுப் பொண்ணு எங்கேடான்னு நாளைக்கு அய்யர் கேட்டா நாங்க என்னா பதிலு