பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

சோலை சுந்தரபெருமாள்



பெரும்பகுதியா வயல் களம் பொழங்கினவங்கல்லாம் அடங்கியாச்சு. எக்கண்டத்திலயும் ஒரு காக்கா குருவிகூட இல்ல. அந்தியில வைக்கத் தெரச்சு வண்டியில ஏத்தியுட்டு களம் பொழங்கி கூலியப் பங்குப் போட்டுக்கிட்டு பொறப்படும்போது, ‘ஆளுக்கு ரெண்டு கையா வைக்கல் இழுத்துப் போட்டு அடக்கிப்போட்டுப் போன விடியக் கருக்கல்ல வந்ததும் கடாவடிய கட்ட வாகா இருக்கும். புடிங்க...’

வீட்டுக்குப் போவ இருக்கும்போது முத்தண்ணன் சொன்னதும் அவன் மவனும், மருமவளும் அலுத்துக் கொண்டார்கள். பாக்கியம் முகம் சுழிக்காமல் ஒரு கடாவடி வைக்கலை இழுத்துப் போட்டு அடக்கினதும் வேர்த்து விறு விறுத்தது. சல்ல யாய் அரிப்பு வேற. ஓடிப்போய் தாமரைக்குளத்தில் விழுந்து அப்புடியே உடம்ப நீவிவிட்டு மிதந்து, பொழுதுக்கும் சாந்து போயி இருக்கும் சூட்ட தணிக்க வைக்கணும் கிற அவசரம். சொணை கரைஞ்சிப் போற வரைக்கும் அப்புடியே வெது வெதுப்பான தண்ணில கெடந்து எழுந்திருச்சுப் போவனுங்கிறது போல ஒரு உணர்வு புரடியைப் புடித்துத் தள்ளியது.

‘தங்கச்சி! விடிய கருக்கல்ல வந்துடு இப்ப அடக்கிப் போட்டத புடுச்சுட்டு, உருமத்துக்குள்ள ரெண்டு கடாவடி அடக்கனும். அஞ்சுமா வைக்க அடம்பா வேற இருக்கு. உச்சி சாஞ்சதும், பீராஞ்சிப் போட்டுட்டு பிரியவுட்டா வெயில் சாஞ்சதும் தெரச்சுப் போட்டு வண்டி யேத்திவுட்டுட்டு வெரசா வூட்டுக்குப் போவலாம். இல்லாட்டா இன்னிக்கும் அகாலமா ஆயிடும். வண்டிக்காரனுங்க கால்ல வெண்ணிர ஊத்திக்கிட்டு வந்து நிப்பானுங்க களம் பொழங்கிவிட்டு வரும்போது முத்தண்ணன் சொன்னது அவள் மனதில்... இன்னும் செத்த நாழிக்கெல்லாம் ‘பாம் பாம்’ன்னு அடிச்சிக்கிட்டு பால்காரர் வந்து நின்னுடுவார். அதுக்குள்ள எழுந்திருச்சி கொட்டுலைச் சுத்தம் பண்ணி கறவப் பசுக்கு தண்ணித் தவிடு வைச்சு பாலக் கறந்து கொடுக்கனுமேங்கிற அவசரத்தில் எழுந்து உக்காந்தாள். மனசு பரபரப்பாய் இருக்கும் அளவுக்கு ஒடம்பு அவளுக்கு ஈடு கொடுக்கவில்லை.

இந்த வீட்டுல அடியெடுத்து வச்ச நாள்லருந்து ஒரு நாளாச்சும் அப்பாடின்னு படுத்திருப்பாளா? சதாகாலமும் சுறுசுறுன்னு... கை புள்ளக் காரியா இருக்கிறப்ப, புருஷன், அம்போன்னு வுட்டுப்புட்டு போயிட்டானேன்னு சுருண்டுக்கிட்டா படுத்தாள்? ஊரு உலகம் மூக்கு மேல கை வச்சிக்கிட்டு பாக்கிறது. போல தான் பெத்தப் பொண்ண முன்னுக்கு கொண்டாந்து வாழ வச்சிக் காட்டனுங்கிற வைராக்கியத்தில தானே இன்னிக்கு வரைக்கும் இந்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இப்ப வந்து