பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

49


சொல்லுகிறேன், வீணே வாயிழக்க இஷ்டமில்லை” என்றாள்.

“எனக்கு இது சந்தோஷ சமயம். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்" என்றான்.

“உங்களுக்கு இனிமேல், அதிகமாக ஓய்வு நேர மிருக்காது. உங்கள் துணிகளைத் தோய்த்துக் கொண்டு வருகிறேன், புஸ்தகங்களையும் நானே படித்துக் கொள்கிறேன்."

“நான் அயர்ந்து போன சமயம் பார்த்து, என்னை வார்த்தைகளால் கட்டுப்படுத்திவிட்டாய். நான் சொல் தவற முடியாது. உன்னிஷ்டம் போல் செய்” என்றான் சர்மா. வீரம்மாள் மிகுதியும் சந்தோஷமடைந்தாள்.

மேலே கூறப்பட்டது நடந்து ஒரு வாரமிருக்கும், நாராயண சர்மா முகவாட்டத்துடனிருந்தான். அந்தச் சமயம் வீரம்மாள் வந்தாள்.

“சுவாமி! ஏதோ வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! எனக்குச் சொல்லலாகாதா? தாயாருக்கு உடம்பு அசௌகரியமா? அல்லது கடனுக்காக அந்த ஆளிடமிருந்து கடிதம் வந்ததா” எனக்கேட்டாள்.

“உன்னிடத்தில் சொல்லக் கூடாதது என் ஆயுளில் ஒன்றுமே இருக்காது. உன்னைக் காட்டிலும் உலகத்தில் எனக்கு வேறு உதவி கிடையாது” என்று சொல்லும் பொழுதே, “சுவாமி! ஆண்பிள்ளைகள் ஒரு நாளும் மனங்கலங்கக் கூடாது. நீங்கள் கண் கலங்கினால், நாங்கள் போகிற வழி என்ன? எதற்கும் கவலைப்படலாகாது என்று என் தகப்பனார் அடிக்கடி எங்களுக்குச் சொல்லுவார். உங்களுக்கு இப்பொழுது என்ன வந்துவிட்டது. தபாலாபீஸில் ஏதேனும் திருட்டுப் போய் விட்டதா" என்று கேட்டாள்.

“ஒரு கடிதம் என் தாயாரிடமிருந்து வந்திருக்கிறது. அதைப் படித்தேன், வருத்தமுண்டாயிற்று. அதை நீ படித்துப் பார்" என்று கடிதத்தைக் கொடுத்தான். நீட்டின. கடிதத்தை வீரம்மாள் வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தடவி, ஆள! சரிப்படுத்திக் கொண்டு, பின்வருமாறு படித்தாள்:

சிரஞ்சீவி நாராயணனுக்கு ஆசீர்வாதம். சகல மங்களங்களும் உண்டாவதாக! நீ எழுதிய கடிதத்தை உன் தங்கை ஞானாம்பாள் எனக்குப் படித்துக் காண்பித்தாள். ரொம்ப சந்தோஷமடைந்தேன். எல்லாம் கடவுளின் கிருபை. அவன் தான் நம்ம குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும். ஞானாம்பாளுக்கு இப்பொழுது பதினான்கு வயது (இந்த மாதத்தோடு) பூர்த்தியாகிற சங்கதி உனக்கு ஞாபகமிருக்கும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவளுக்குள். கலியாணம் பண்ணியாக வேண்டும். இப்பொழுதே, ஊரார் கண்டதெல்லாம் பேசுகிறார்கள். வைதீகாள் விட்டுப் பெண்ணைப் பதினெட்டு வயதானாலும் கலியாணம்