பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 ஒரு மாதத்துக்கு 4 கலம் நெல் கொடுத்து ஒரு கணக்குப்பிள்ளை வைததுக்கொள்ளலாம். மேற்சொன்னவரிடம் இருந்து கண்டுமுதலுக்கு 150 கலம் அதிகம் ஆகும் என்று அனுப்பின பிறகு உத்தரவு அனுப்பப்படும் ” என்ற குறிப்பால்" அறியப்பெறும். மேல்வாரம் எவ்வளவு குடிவாரம் எவ்வளவு என்பது பற்றிய குறிப்புக்கள் உண்டு. கி. பி. 1798க்குரிய ஆவணக்குறிப்புப் பின்வருமாறு : 1199 ......... நிலம் வேலி 25க்கு குத்தகை கலம் 5716) யில் சம்பா பசானம் நிலம் வேலி 22க்குக் குத்தகை நெல் (கலம்) 5110. இதற்குக் குடிவாரம் 20:44, போக மேல்வாரம் 3066 ...... " .." Tr. | L. பலவகை வருமானம் நிலவரி அல்லது நிலவருவாய் மட்டுமன்றிப் பல்வேறு வழிகளில் மராட்டிய அரசருக்குப் பொருள் வருவாய் இருந்தது. கும்பினியார் தஞ்சை சமஸ்தான வசூலை ஏற்றுக்கொண்டதும், நிலவரி மட்டுமன்றி உப்புவரி, முத்திரைப் பத்திரம், நாணயம் அடித்தல் முதலிய பல வழிகளில் பொருள் குவிக்கலாயினர்". இவ்வழிகளில் எல்லாம் மராட்டிய மன்னரும் பொருள் பெற்றிருந்தனராதல் வேண்டும். உப்பு வருமானம் தஞ்சை மாவட்டத்தில் பல உப்பளங்கள் உண்டு. ங் 1805 : உப்பளங்கள்; அதிராம்பட்டனம் ராஜகோபாலபட்டணம்: மகசில்கோட்டை, தரமணக்கோட்டை : ராஜாமடம் , தம்பிக்கைநல்லகோட்டை - இந்த உப்பளங்கள் கணக்கு 1805 அக்டோபர் 12இல் மேஸ்தர் பிளாக் பர்னிடம் அனுப்பியது" என்ற குறிப்பால் பல உப்பளங்கள் இருந்தமை பெறப்படும். - 10, 12-118, 119 11. 4-286 H. 12. "The taxation income under the Company's rule during the first half of the 19th Century consisted of land revenue, salt tax, customs duties, tobacco monopoly, Abkarry, Moturpha (tax on looms) and sayer - inland duties. Besides these were the Post Office revenue, stamp duty, the mint duties and other smaller source of income” - page 157, East India Company and South Indian Economy - C. Ramachandran, New Era Publications, Madras (1980). 13, ச. ம.மோ. க. 3.89 |B