பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 வரி 'தஸ்துரி வரி' என்று அழைக்கப்பட்டதாதல் வேண்டும். இந்த வரியுடன் கடைக்கும் வாடகைப் பணம் வசூலிப்பர். ' கோவிலுக்குத் தஸ்துரி வரி கடைக்கு வரிப்பணம் மீ"க்கு, 4, 2 பணம் வீதம் கொடுத்துக் கொண்டு ' என்பதால் தஸ்துரி வரி கடையை வைத்து வியாபாரம் செய்பவர் கடை வாடகைக்கு வேறாக அரசுக்கு வியாபார வரி செலுத்த வேண்டியிருந்தது என்றறியப்பெறும். வியாபாரம் செய்வோர் தரும் வரியே தஸ்துரி வரி ' எனப்பெற்றது. -- * * * *- : . . . மராட்டிய மன்னர்களும் சிறு சிறு கோயில்கள் எடுப்பித்தனர் என்று முன்னர்க் கூறப்ட்ட்டது. அன்ன்ோர் அவற்றுக்குத் தேவைப்பட்ட க்ருங்கற் களை எங்கிருந்து கொணர்ந்தனர் என்பதை அறிய ஒரrவணம்" துணை செய்கிறது. திருவண்ணாமலை, வடாற்காடு மாவட்டம் விரிஞ்சிமலை ஆகிய மலைகட்குச் சென்று தெய்வத் திருவுருவங்கள் செய்தற்குக் கற்களைக் கொணர்ந்தனர் என்று அவ் ஆவணக்குறிப்பால் அறியப்பெறும்.: ---" — * . - திருவலங்குறிச்சி, துறையூர் ஆகிய மலைகளிலிருந்தும் கற்கள்கொண்டு வருவதுண்டு என்று இருகுறிப்புக்களில் காணப்பெறுகிறது.'அ o

  • ..."

தஞ்சை மராட்டிய மன்னர்கள் சமயப்பொறை மிக்குடையராய்த் திகழ்ந் தின்ர்; பிற சமயத்தவர்க்கு வேண்டிய ஆதரவுகளும் அளித்து அச்சமயங்களை யும் 7ן י ந்து வந்தனர். ------- பிரதாப சிங்கர் 1739இல் அரசரானவர் இவர் 1740இல் நாகூருக்குச் செல்கிறபொழுது வழியில் "வடயாரங்குடி'க்கு அருகில் " பாவாசாகேப்பின் தர்க்கா" மசூதி குளம் மண்டபம் இவை பற்றி விண்ணப்பம் அளிக்கப்பெற்றது. அதில் தீபா நகரப் பேட்டை சுங்கத்தின்று ஒரு காசு வீதம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் இருந்தது. அரசர் அங்ங்னமே தருக என ஆணை பிறப்பித்தார்." - துளஜா ராஜா 1765இல் அரசரானார். இவர் கி.பி. 1776இல் மகம்மது ஸேக்குக்கு மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் "காகிதத்தின் மூட்டைகளின் குப்பைக்கு அருகில் 12அடிக்கோலினால் 2 வேலிநிலம் இனாம் கொடுத்தார்." 176. 6-157, 159 (கஸ்கார் - Custom, usage : வழக்கம்) 177. ச. ம. மோ. த. 9-87 178, திருச்சியினின்று கருங்கற்களைக் கொணர்வதுண்டு என்று தமிழ்ப்பல்கலைக் கழகக் கல்வெட்டுத்துறை இணைப்பேராசிரியர் ஆக இருந்த டாக்டர் சி. ஆர். சீனிவாசன் அவர்கள் கூறினார்கள். திருவக்கரையினின்று கொணரலாம் என்று திருவார் திருஆமாத்துர்த் திருமடத்து அடிகளார் கூறினார்கள். அவிநாசி திருமுருகன் ஆண்டி ஆகிய தலங்களுக்கு அருகிலுள்ள கற்களும் பயன்படுவதுண்டு என்று. அன்பர் திரு நாகராசன் கூறினார். 178.அ. ச. ம. மோ. த. 18.88, 99 179. ச. ம.மோ. க. 14.45 180. காகிதப்பட்டறை போலும் 181, 5.802, 808