பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இசை, நாடகம், நாட்டியம் தஞ்சை இசையின் இருப்பிடம் என்னலாம். தஞ்சை மராட்டிய மன்னர் இசையை நன்கு வளர்த்தனர். தாமே இசையில் வல்லுநர்களாய், இசை நாடக நூல்கள் வரைந்தும், இசை வல்லாரை ஆதரித்தும், நாடகங்களை நடிக்கச் செய்தும், கருநாடக இசையுடன் இந்துஸ்தானி இசையைப் போற்றி யும், மேனாட்டிசையைப் புரந்தும் பல வழிகளில் இசையைப் பேணினர். ஸ்ாஹஜி ஏகோஜி என்ற வெங்காஜியின் முதல் மகன் ஸாஹஜி. இவர் கி. பி. 1684 முதல் 1712 வரை ஆட்சிபுரிந்தவர். இவரை 'அபிநவபோஜன் " என்று புகழ்ந்துரைப்பர். இவர் பன்மொழிப் புலவர் 30க்கு மேற்பட்ட இசைநூல் க்ள்ை இயற்றியவர். இவர் இயற்றியவற்றுள், பல்லகி சேவா பிர்ப்கிதம்' என்பது குறிப்பிடத்தக்கதாகும். - பல்லக்கி சேவா பிரபந்த ஸாஹஜி கிருத - கிருஷ்ண சரித்திரம்-வரி 6 வீதம் பக்கம் 36 ' - i. - என்ற குறிப்பால் , இந்நூல் 'விஷ்ணு பல்லகி சேவா பிரபந்தம்' என்ற நூலாதல் கூடும். " சங்கர பல்லகி சேவா பிரபந்தம் ' என்ற நூலும் உண்டு." பல்லகி சேவை " என்பது தஞ்சை மாவட்டக் கோயில்களில் பரவலாக இருந்த ஒரு வழிபாட்டு முறை. இறைவன் உலா வருங்கால் இசையுடன் நடனமும் நட்ைபெறும். இவற்றுக்கு இலக்கிய நடையும் இசை மேன்மையும் 1. Læsth 64, Tanjore as a seat of Music - by Dr.S. Seetha 2. பக்கம் 65 3. பல்லக்-பல்லக்கு 4. 12-288 5, 6, பக்கம் 72, டாக்டர் சீதா | TH H. H.