பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அரசமுறை தஞ்சை மராட்டிய அரசுக்குத் தலைமைவகித்து ஆட்சி செய்யும் உரிமையுடையவர் ஆகிய தந்தைக்குப் பிறகு, மூத்த மகனே ஆட்சிக்கு உரிமையுடையவர் ஆவர். வெங்காஜி இறந்ததும் அவருடைய மூத்த மகன் ஆகிய சாஹஜி அரசர் ஆனார். சாஹஜி பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தபிறகு, அவர்க்குப்பின் அரசனாவதற்குக் குழந்தை இல்லை. ஆகவே அவர் தம்பி முதலாம் சரபோஜி அரசர் ஆனார். இவர் அரசர் ஆன பொழுது சாக்கோட்டை சுபாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார் என்று சொல்லப் படுகிறது. இதனால் தந்தை ஆட்சி செய்யும்பொழுது மகன் ஒரு பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பழக்கம் இருந்ததாதல்கூடும் என ஊகிக்கலாம். " சரபோஜி தன் தம்பியான துக்கோஜி ராஜாவுடன் ராஜ்யபாரம் நடத்திவரும்போது இவர்களுக்குள் குடும்ப மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே துக்கோஜி ராஜா தன் மூத்த சகோதரரிடம் இருந்து ராஜ்யத்தில் ஒரு பகுதியை அடைந்து குடும்பத்தோடு மகாதேவபட்டணத்தில் இருந்துவந்தார்." என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறும். இதனால் உடன்பிறந்தார் இருவரும் ஒருங்கு ஆட்சி செய்வதுண்டு என்றும் தெரிகிறது. மனவேறுபாடுற் றதும் தம்பி வேறோரிடத்துக்குப் போய்த் தங்கியிருந்தமையின், மூத்தவருக்கே ஆட்சியுரிமையென்பது உறுதி எய்துகிறது. 1. P. 230, Maratha Rule in the Carnatic-Srinivasan, C. K. 2. இது மன்னார்குடி சுபாவில் உள்ளது. - 3. Lásio 82, 88; (Sarabhoji) became the ruler conjointly with his brother Tukkoji *' - P. 230, Maratha Rule in the Carnatic.