பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பல்வேறு பகுதிகளில் இருந்தமை மாகாணங்களின் பெயர்களைக் கொண்டு அறியலாம். அன்றியும் கோட்டுர் மாகாணத்தில் கொடுத்த ஐந்து வேலி 'நிலம் கொண்ட பகுதிக்கு லசுஷ்மி நரசிம்மபுரம் என்றும் தனிப்பெயர் கொடுக்கப் பெற்றது. கொடுக்கப்பெற்ற நிலங்கள் எத்தகைய நிலங்கள் என்பது கூர்ந்து அறியத்தக்கது. " அனாதி தரிசு " என்றமையால் பல ஆண்டுகளாக அவை உழுது பயிரிடப் பெறாமல் இருந்தனவாதல் வேண்டும். இவ்வனாதி தரிசு பெற்றமையான் வேதியர்கட்குப் பயன் என்ன என்ற கேள்வி எழலாம். நிலமும் உண்டு; நிலத்திற்குப் பாய்ச்ச நீரும் உண்டு; அதை உழுது பயிரிடக் குடிமக்களும் உண்டு ; எனினும் ஏழைக் குடிமக்கள் பயிர்த்தொழில் செய்ய விதை வேண்டும்; ' தசு கூலி " வேண்டும்; எரு வேண்டும்; காவல் வேண்டும்; களை கட்டல் வேண்டும்; இவை செய்யுங் காலத்தில் அவர்களும் உண்டு வாழ வேண்டுமே. இவற்றுக்கொல்லாம் பணம் தேவை. _ - _ -- இத்தகைய தரிசு நிலங்களைத் தானமாகப் பெற்றவர் தம் வாழ்நாள் முழுவதும் அந்நில வருவாயை அனுபவிக்கலாம். அந்நிலத்துக்கு அவர்கள் தீர்வை (வரி) செலுத்தவேண்டியதில்லை அல்லது மிகச்சிறு தொகையே செலுத்தவேண்டும். அன்னோர் வசதிபடைத்த்வராக இருத்தலும் கூடுமாதலின் பயிரிடும் செலவுகளில் பெரும்பகுதி முன்பணமாகத் தரவியலும்; அவர்கள் மேற்பார்வையில் அந்நிலங்கள் ' பயிரிலி நன்செய் ' ஆக இருந்த நிலையி லிருந்து பயிரிடப்பெறும் நிலையை எய்தும். - o தரிசு நிலங்கள் அரசனுக்கே சொந்தம். அவன் அனுமதியின்றிப் பயிரிடமுடியாது. ஆகையால், விலைகொடுத்துப் பெறாமல் இலவசமாக இந்நிலங்களைப் பெற்றனர்; தரிசு நிலத்தைப் பயிரிடக்கூடிய நிலமாக ஆக்கினர் வருவாயைப் பங்கிட்டு நுகர்ந்தனர். இவையே சுரோத்திரியம் பெற்றதனானாய பயன்கள் எனலாம். சுரோத்திரியங்கள், தருவதற்கு முன், தரிசு நிலங்களே என்பதில் ஐயமில்லை: -- - - " வடக்கு வட்டம் நல்லாடை மாகாணம் ரொம்ப காளாகத் தரிசாக வெள்ளெருக்கு முளைத்து உடைப்பினால் சாகுபடி செய்யாமல் இருப்பத்ால் ஹரிஹரபுரம் என்று பேர்வைத்து 4 பேருக்குச் சுரோத்திரயம் செய்தது ' என்ற குறிப்பும் இதற்குச் சான்று பகரும். இது கி. பி. 1777க்குரிய நிலக்கொடை இரண்டாம் துளஜாஜி அளித்த சுரோத்திரியம் ஆகும். இதிலும் அச்சுரோத்திரியப் பகுதிக்கு ' ஹரிஹரபுரம் " என்று வேறு பிரித்துப் பெயர் வைத்தமை உணரற்பாலதாம். 5, է ո ԼԸ மோ. தி. 2-4