பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*273 பார்வையில் இருந்ததாகத் தெரிகிறது."அ சுலக்ஷனாபாய் (இரண்டாம் துளஜா வின் மூன்றாவது மனைவி) இறந்தபிறகு இரண்டாம் சர்போஜியின் மூத்த மனைவி அஹல்யாபாயிக்கு இச்சத்திரம் உரியதாயிற்று என அறியலாம். யார் பெயரால் ஒரு சத்திரம் அமைக்கப்பட்டதோ அவர் மேற்பார்வையில் அச் சத்திரம் அவர் வாழ்நாள் வரையில் இருக்கும் என்றும், அவருக்குப்பின் உயிர் வாழும் மூத்த அரசமாதேவிக்குச் செல்லும் என்றும் ஒருமரபு இருந்ததாகத் தெரிகிறது."ஆ இச்சத்திரத்துக்கு ஈரக்கொல்லை என்ற கிராமம் 1150 சக்கரம் கொடுத்து விலைக்கு வாங்கப்பெற்றது."இ 9. இராஜஸாம்பாபுரம் அன்னசத்திரம் இராஜஸாம்பாபுரம் அன்னசத்திரம் என்பது தாராசுரச் சத்திரத்தைக் குறிக்கும். இச் சத்திரத்தினின்று சரஸ்வதி மகாலுக்கு 1827இல் 501 எழுத்தாணிகள் அனுப்பப்பெற்றன." இராஜஸாம்பாள் என்பவர் இரண்டாம் துளஜாவின் முதன் மனைவியாவார்."உ 10. மகாதேவ பட்டணம் இங்கு உமாபாயி சாகேப் சத்திரம் என்னும் ஒரு சத்திரம் இருந்ததாகத் தெரிகிறது. இது 1786க்குரிய குறிப்பு. . " . 11. முக்தாம்பாள் சத்திரம் இது ஒரத்தநாடு சத்திரம் எனப்பெறும். இது 16-1-1802 துன்மதி புஷ்யசுத்த திரயோதசியில் கட்டத் தொடங்கப் பெற்றதாதல் வேண்டும்." இச்சத்திரத் தோற்றம் பற்றிப் போன்ஸ்லே வமிச சரித்திரம் தமிழாக்கம் பக்கம் 196இல் கூறப்பெற்றுள்ளது. - + முக்தாம்பாள் என்பவர் சரபோஜி தம் திருமணத்துக்கு முன்னரே சேர்த்துக் கொண்டிருந்த காமக்கிழத்தியாவர். இவ்வம்மையார் தாம் இறக்கும் 97.அ. ச. ம. மோ. த. 28-88 - 974. Raja Serfoji in his letter to the Resident of Tanjore stated that the superintendence of the Chatram ” always descended from the elder to the younger queen, that it remained in the hands of the senior queen until her death and then descended to the wife of the reigning Raja” – Page 29, para 6, Note on the Past & Present Administration of the Raja’s Chatrams, Tanjore & Madurai Districts, 1908 - 97இ, 4-199 97ஈ. 4-198 97.உ. பக்கம் 100, போன்ஸ்லே வமிச சரித்திரம் 38, 8–169 99. 8-229, 280 ஒரத்தநாடு முக்தாம்பாள் சத்திரத்தின் நுழைவாயிலில் உள்ள மராத்தி கல்வெட்டு இதனை வலியுறுத்துகிறது. -- ஒரத்திநாடு - அன்றும் இன்றும் - ஆர். இராமசேஷன், 1977-78, அரசினர் கல்வியியல் கல்லூரி மல்ர், பக்கம் 17 - -- - - - - - 35