பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பொழுது தம் பெயரால் ஒரு அன்னசத்திரம் ஏற்படுத்த வேண்டும் என்று அரசரை வேண்டிக் கொண்டார். அவ்வேண்டுகோட்கிணங்க இரண்டாம் சரபோஜி இச்சத்திரத்தைத் தொடங்கினார். முக்தாம்பாள்புரம் சத்திரத்தில் நாடோறும் மூன்று வேளை உணவு அளிக்கப்பெற்றது; உலுப்பைகளும் தரப்பெற்றன." சத்திரங்களில் இருந்த நடைமுறைக்கேற்பத் தரும கலியாணம் நடத்தப்பெற்றது.' இச்சத்திரத்துக்கு உமையாள்புரத்திலிருந்து கி. பி. 1825இல் 13007 கலங்கள் நெல் அனுப்பப் பெற்றது" என்றதினின்று அச்சத்திரத்தின் உணவுச் செலவு எவ்வளவாக இருந்திருக்கலாம் என்பதை ஊகித்தறியலாம். கி. பி. 1825இல் ரெஸிடெண்டு ஜான் ஃபைஃப் (Fyte) இச்சத்திரத்துக்குச் சென்றிருந்தார். அவர் அங்கிருந்த ஐந்து கல்வி நிலையங்களைப் பார்த்தார்; எத்தனைப்பேர் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் படிக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். படிக்கிற பையன் களின் எண்ணிக்கை 641. ஒரு நாளைக்கு 3 வேளையும் சாப்பிடுகிறவர்கள் 4020 பேர்;" பைராகிகளுக்கும், உலுப்பைதாரர்களுக்கும் ஓராண்டிற்குக் கொடுக்கும் நெல் 45,000 கலம்; மாதச் சம்பளக்காரர் செலவு ஆன தொகை ரூ. 9000 - என்று பல செய்திகள் ஓராவணத்தினின்று தெரியலாம்." இச்சத்திரத்துக் கல்வி நிலையங்களில் ஆங்கிலப் படிப்பும் உண்டு. திருநெல்வேலியினின்று வெள்ளாளர் ஒருவர், சொக்கலிங்கம் என்ற பெயருடையவர் முக்தாம்பாள்புரச் சத்திரத்தில் ஆங்கிலப் படிப்பை முடித்துக் கொண்டு தன் ஊருக்குப் போனார்; அவர் ஊர்க்குச் செல்லும்போது ரூ. 10 இனாம் வழங்கப்பட்டது." முக்தாம்பாள்புரச் சத்திரம் நல்ல வருவாய் உடையது; ஆகையால் சத்திரத்துக்குரிய சேமிப்புத்தொகையினின்று பெருந்தொகை சர்க்காரில் கடன் வாங்கப்பெற்றது என்றும், அவ்வாறு பெற்ற தொகைக்கு வட்டி ஒரு மாதத்துக்குச் சக்கரம் 600 என்றும் ஓர் ஆவணம் கூறுகிறது." இதனால் சத்திரத்தின் சேமிப்புத் தொகை வட்டிக்கு விடப்படுவதுண்டு என்பது போதரும். மாதத்துக்கு 600 சக்கரம் வட்டி எனின், 12 % வட்டியாகக் கொண்டு நோக்குமிடத்து, 60000 சக்கரம் சர்க்காரில் கடன் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருசமயம் முக்தாம்பாள்புரம் சத்திரத்தில், அரிசி முதலியவற்றின் இருப்பு, கணக்குக்கு ஏற்ப இல்லை குறைவாகக் காணப்பட்டது. இதற்குக் காரணம் அவை நாடோறும் களவாடப் பெற்றமையே என்பது கண்டுபிடிக்கப் பெற்றது. கணந்தங்குடிக் கள்ளர்களும் வலையர்களும் இரவில் மூன்று பேர் 100. 4-52 101. ச. ம. மோ. த. 8-45 (அடிக்குறிப்பு 86.அ காண்க) 102. ச. ம. மோ. த. 18-180 - 103. கி. பி. 1814இல் ரம்சான் மர்தம் 9ஆம் சாள் 4570 பேர் சாப்பிட்டனர் ; 1:880 104. 2.241 முதல் 248 வரை 105. 4-244 106. 4-420, 421