பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கொட்டையூர்ச் சிவமலேந்து பண்டாரம் என்றும், கொட்டையூர்ப் பண்டாரம் என்றும் கூறப்பெறுபவர், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் என்பதில் ஐயமில்லை. ' கொட்டையூர்ச் சிவமலேந்து பண்டாரம் பாடல் 436க்கு 1; 360க்கு 2" என்றும்,' - ' கொட்டையூர்ப் பண்டாரம் பாடல் 365க்கு 1; 525க்கு 1; 360க்கு 1; 401க்கு 1" என்றும் உள்ள குறிப்புக்களால் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் யாத்தவை 6 சுவடிகளில் இருந்தன என்று அறியப்பெறும். " வெங்கடாசலம்பிள்ளை பாடல் 101க்கு 1; 100க்கு 1” என்ற குறிப்பு" வெங்கடாசலம் பிள்ள்ை என்பவர் பாடியன 201 பாடல் என்றறியவரும். சுப்பராயக்கவிராயர் குதிரை வைத்தியம் பற்றிய பாடல்களை எழுதினார். இது, " சுப்பராயக்கவிராயர் பாடல் அஸ்வ வைத்தியம்-1” என்ற குறிப்பால்' தெரியவரும். தொடர் எண் 92 : சரபேந்திரர் நீரிழிவு ரோக சிகிச்சை முதலியன, செ. 560 : தொடர் எண் 98 : விரணரோக கரப்பான் ரோக சிகிச்சை செ. 815 ; - ஆகிய 11 நூல்களை எழுதியவராக வேலாயுத வாத்தியார் காணப்பெறுகிறார். இவர் அய்யாக்கண்ணு என்பவருடைய மகன் என்பதும், இவர் காரைக்குறிச்சி என்னும் ஊருக்கு உரியவர் என்பதும், விஷ ரோக சிகிச்சை என்னும் நூலைச் சகம் 1750 (1828) இல் பாடினார் என்பதும், சரஸ்வதிமகால் வெளியீடு எண் 72, செய்யுள் 507 - 508இல் காணலாம். நீரிழிவு சிகிச்சை என்ற நூலைச் சகம் 1749 (1827இல்) பாடினார் என்று சரஸ்வதி மகால் வெளியீடு எண் 88இல் பாடல்கள் 586-588ஆல் அறியப்பெறும். 45. 12-220 சரஸ்வதி மகால் தமிழ்ச்சுவடிகளின் விளக்க அட்டவணை பகுதி III தொடர் எண் 80, வாத ரோக சிகிச்சை செ. 408; தொடர் எண் 81, சன்னி ரோக சிகிச்சை செ. 860; தொடர் எண் 88, உளமாந்தை கூடியரோக சிகிச்சை செ. 862இவை கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் எழுதியனவாக வெளியிடப்பெற்று உள்ளன. 46. 12-220; சரஸ்வதி மகால் தமிழ்ச் சுவடிகளின் விளக்க அட்டவணை பகுதி III தொடர் எண் 94, பாண்டு காமாலை சிகிச்சை செ. 101. 47. 12-220; டிெ வெளியீட்டில் தோடர் எண் 95, சுர ரோக சிகிச்சை - ஏடுகள் 57, சுப்பராயக் கவிராயர் எழுதியது என்று உள்ளது. ஆனால் தொடர் எண் 96, அசுவ வைத்தியம் ஏடுகள் 45; இதனைத் தமிழில் இயற்றியவர் கொற்கைக் கோமான் குணராச சூரியன் " என்றுளது,