பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 இருந்தாள். அப்பெண்ணைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்ட இரண்டு ஆண்டு களாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். கோயிலில் உள்ளவர் காலதாமதம் செய்தனர். அதனால் அவள் அரசனிடம் முறையிட்டாள். கோயிலில் இல்லாமற் போனாலும் அரசாங்கத்தில் வேறு எந்தத் துறையிலாவது பொட்டுக் கட்டவேண்டும் என்று வேண்டினாள். இதனால் தேவதாசிகளைக் கோவிலில் மட்டும் அன்றிப் பிற அரசாங்கத்துறைகளிலும் பொட்டுக்கட்டி அழைத்துக் கொள்வதுண்டு என்பது தெரிகிறது." ஒவ்வொரு துறையின் மேற்பார்வையில் ஏதாவது ஒரு கோயில் இருக்கலாம் ; அங்குப் பொட்டுக் கட்டுவர் என்று ஊகித்தறியலாம். கோயிலில் பணிேவிடைக்குத் தடை நேராவண்ணம் ஒரு தேவதாசி போனதும் உடனே வேறொருவரை நியமிப்பர். 1843 : சரபேந்திர ராச பட்டணம் தாசி வீர லகஷ்மி இறந்தாள். அவட்குப் பதிலாக நீலாவின் பெண் வெங்கட லசஷ்மி வயது 18 சேர்த்துக் கொள்ளப்பட்டாள்.' - இங்ங்ணம் உள்ளது ஓர் ஆவணக்குறிப்பு." தேவதாசிகள் நாட்டியம் முதலிய கலைகளில் வல்ல கலைஞர் ஆக இருந்தபோதிலும் அவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.' தாசிகள் சில நகைகள் அணிதல் கூடாது. சில வகையான ஆடைகளை உடுத்தல் கூடாது என்று ஒரு குறிப்பு உள்ளது: " சந்திரமா, பரங்கப்பட்டா, கல்லிழைத்த ராக்கடி, பேசிர், மகரகண்டி, 5 கலசமுள்ள ஜிமிக்கி, காதுபட்டை, வெள்ளிகத்தி, விருவதி அணியலாகாது. பூராக்கடி ஹாரங்களுக்குக் கிளி எலுமிச்சை பஞ்சாபட்டை வகையறாக்கள் கூடாது. நெற்றியில் நீளமாகக் குங்குமம் இடலாகாது. மத்தாப்பு நிறமுள்ள ரவிக்கை ட்வைகள், ஜாலராக்கள், குசும்பா புடைவைகள் வெள்ளை துப்பட்டா, கைஉருமாலை, வேலை செய்த நாடா, மோதிரம் ஆகியவை அணியலாகாது. இவைகள் எல்லாம் பொட்டுக்கட்டும்போது மாத்திரம் போட்டுக் கொள்ளலாம்' - இங்ங்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் தேவதாசி சுந்தரி என்பாளுக்குச் சில சலுகைகள் கொடுக்கப்பெற்றன என்பது "நாடகம் நாட்டியம் " என்ற தலைப்பில் எழுதப்பெற்றுள்ளன." ஆண்டுக் காண்க.'அ 12, ச. ம. மோ. த. 22-24. 13. ச. ம. மோ, த. 4-6 14. 9-8 இசை நாடகம் காட்டியம் என்ற தலைப்பில் அடிக்குறிப்பு 178க்கு உரியது காண்க. 15. ச. ம, மோ. த. 8-48 16. 9-5, 7, 8, 9 16:அ. இசை நாடகம் காட்டியம் என்ற 16ஆவது கட்டுரை அடிக்குறிப்பு 175, 176, 177, 178க்குரியவை,