பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 சிறு வயதினளாக இருக்கும் பெண்களை விலைக்கு வாங்கிக்" கோவிலுக்குப் பொட்டுக் கட்டச் செய்வதுண்டு என்றும், அன்னோர் பிற இடங் களுக்கு மாற்றப் பெறுவர் என்றும் தெரியவருகிறது. இரண்டாம் சரபோஜி காலத்தில் வீரலகஷ்மி என்ற ஒரு தேவதாசி இருந்தாள். அவளுக்கு நான்கு பெண்கள் இருந்தனர். அந்நால்வரையும் கிரயப்படுத்தி 'ச் சரபேந்திரராச பட்டணத்தில் இருந்த சிதம்பரேசுவர சுவாமிக்குப் பொட்டுக் கட்டி ஒருவருக்கு 5 பணம் இரண்டு கலம் நெல் சம்பளம் ஏற்படுத்தினர். கணக்கில் ' வீரலகஷ்மி வகையறா ஐவர் " என்று கண்டிருந்தது. சரபோஜிக்குப் பிறகு சிவாஜி காலத்தில் சில ஆண்டுகள் சரபேந்திரராச பட்டணக் கணக்கில் 'சிவங்கிக் கோட்டையில் ' சம்பளம் பெற்றனர். ஏறத்தாழ 1840 இல் 睡 == பேரையும் பெர்கண்டு " சங்கீத பதக்கில் ಶಿಡಿ: சம்பளம் பெற்றனர். பின் ஏறத்தாழ 1845இல் ' கச்சேரியில் ' இவர்கள் பெயர் பதிய வைக்கப்பெற்றன. அங்குச் சில ஆண்டுகள் சம்பளம் வாங்கினர். சிவாஜி காலம் ஆனார். அரண்மனையாரவர்கள் இவர்களின் சம்பளத்தை நிறுத்திவிட்டனர்." (பின்னர் நிலுவை தரப்பெற்றது). இச் செய்திகளால் ஒரு தாய் தன் குழந்தைகளோடு விற்பனைக்கு உட்பட்டுத் தேவதாசியாகித் தொண்டுபுரிவதுடன், எந்த இடத்துக்கு மாற்றம் செய்த போதிலும் செல்வதுண்டு என்பது உறுதியாக அறியப்பெறும். உடன் பிறப்பினராய நால்வரையும் பிரிக்காமல் ஓரிடத்துக்கே மாற்றியது குறிப்பிடத் தக்கது ஆகும். ஒரு கோயிலிலிருக்கும் தாசி வேறொரு கோயிலுக்குப் பொட்டுக் கட்டிக் கொள்ள அனுமதி தருவதும் உண்டு. காமாட்சியம்மன் கோயில் தாசிகள் குளிவாய் (வயது 12) கம்பாலயம் (வயது 10) ஆகிய இருவரும் தஞ்சைப் பெரிய கோயிலில் பொட்டுக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்." இது 1882இல் நடை பெற்றது. -- கோயிலுக்குப் பொட்டுக் கட்டிக் கொள்ளச் சர்க்கார் அல்லது கோயிலார் அனுமதி தேவை. இஃது ஒர் அலுவல் ஆகையால் அனுமதி தேவைப்பட்டது போலும். கோட்டையில் எல்லையம்மன் கோயில் தெருவில் பெரிய கோயில் நாட்டியப் பெண் ஒருத்தியிருந்தாள். அவளுக்குக் கிருஷ்ணா என்ற ஒரே பெண் 9. " Another witness stated that dancing girls when they grow old, obtain girls and bring them up to follow their profession and that good looking girls are generally bought" ( - Indian Law reports, Madras Series XXI 11, 1900 ) F. N. No. 17 of Castes and Tribes in South India by Edgar Thurston & K. Rangachari, Vol Il c to J.; Cosmo Publications 1909, reprinted 1975 ( - Devadasi). 10. 1.690 முதல் 896 வரை 11. ச, ம, மோ. க. -ே19