பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 அவரைப் பற்றித் தஞ்சை ஜில்லா கலெக்டர் எச். எஸ். தாம்ஸன் அவர்களுக்கு முத்துசாமிப் பிள்ளை என்பவர் 2-8-1875இல் கடிதம் எழுதி உள்ளார். லகஷ்மி அம்மாள் திருவையாறு புஷ்ப மண்டபத் தெருவில் வசித்து வத்தார். அப்பொழுது மங்கள விலாஸ் கோவிந்தா பாயியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் தம்பி சீனிவாச ஐயங்காருடன் நட்புக் கொள்ளச் செய்தார். இது தெரிந்து தஞ்சைக்குத் திரும்பிவிடவேண்டும் என்று கலெக்டர் ஆணையிட அவர் பொருட்படுத்தாமல் இருந்தார் உதவித்தொகை_நிறுத்தப் படும் என்றதும் தஞ்சைக்கு வந்துவிட்டார். சீனிவாச அய்யங்கார் இறந்தார் : அவர் வேலைக்குத் திருவேங்கடத்தான் என்பவரை நியமித்துக் கலெக்டருக்கு விக்கில் வைத்துத் தெரிவித்தனர். கலெக்டர் ஒப்புதல் தரவில்லை. ஸர்க்கேல் விராசாமிப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடத்தான் லகஷ்மி அம்மாள் விட்டுக்குப் போகத் தொடங்கினார். மறுபடியும் கோவிந்தம்மாள் லசுஷ்மி அம்மாள் வீட்டில் வந்து தங்கினார். இதைக் கவனிக்கவேண்டும் என்று முத்துசாமிப் பிள்ளை என்பவர் கலெக்டருக்கு எழுதியிருக்கிறார்." மேலே கண்ட மங்கள விலாஸ் மாதரார் இருவரின் தவறான நடத்தை பற்றி ரங்கசாமி நாயகர் 16-8-1876இல் ஒரு கடிதம் எழுதியுள்ளார்." 18.ட9-1876இல் வீறு பிள்ளை என்பவரும் இது பற்றியே எலர்க்கேல் கோவிந்த ராவுக்கு எழுதியுள்ளார். மங்கள வாஸம் சோனா பாயி பேரிலும் ஒழுக்கக் குறைவுக்குற்றம் சாற்றி மானேசர் வீராசாமிப்பிள்ளைக்குப் பேர் விளங்கான் எழுதிக் கொண்ட கடிதம்' ஒன்றும் உள்ளது. அக்கா மார் பாயி சாயேபுகளின் பணிப்பெண்டிர் " அக்கா கூட்டம் ' என்று குறிக்கப்பெற்றனர்." அவர்கள் சர்க்காரின் பரம்பரையின் குழந்தைகள்." அவர்களுக்குச் சம்பளம் ரு. 7 அல்லது 8 ரூ. வரையில் தரப்பெற்றது. 1912க்குரிய 26ஆம் எண் அசல் வழக்கு 1916இல் விசாரிக்கப் பெற்ற பொழுது யோகாம்பாள் என்பவர் ஆறாவது சாட்சியாக விசாரிக்கப் பெற்றார். 1916இல் இவர் 85-86 வயதுடையவர். இவர் அக்கா கூட்டத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றிச் செய்திகள் குறிப்பிடும்பொழுது இவருடைய தந்தை பெயர் சுப்பராவ் என்றுள்ளது ; கணவன் பெயர் இல்லை; ஆகவே இவர் பதியிலார் ஆதல் கூடும். இங்ங்னமே அக்காமார் யாவரும் பதியிலார் ஆதல்கூடும். அவரைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அக்காமார் தாலி அணிவர் -- 38. 6-894 முதல் 899 வரை 39, 6–390, 891 40. 6-891 முதல் 894 வரை 41. 6-851 42, 43. 4-154