பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 போய் வரவேண்டும் எனில், வழியில் ஒருவரும் தடைசெய்யாமல் இருத்தற் பொருட்டு அரசாங்க முத்திரையுள்ள வழிநடைச்சீட்டு அளிக்கப்பெற்று வந்தது. வழிநடைச் சீட்டுக்கு " ரக தாரி ' என்று பெயர் காணப்படுகிறது. "1818 ஜூலை 20ஆம் தேதி பாதசார ராமாஜி காட்கே சொந்த காரியமாகச் சென்னைப்பட்டணம் போய்வர " றகதாறி " "1818 ஆகஸ்டு 18ஆம் தேதி சாரங்கபாணி அய்யங்கார் திருப்பதி யாத்திரை போய்வர "றகதாரி' == ' 1818 ஜூலை 19ஆம் தேதி கலியாணமகால் தட்டி கிதாஜி கானோஜி பாலேகர் வகையறா ஆசாமி - 3; இவர்கள் பூனா பிராந்தியம் பண்ட்ரி புரத்துக்குச் சமீபம் தாந்துளவாடி கிராமத்துக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டு திரும்பி வருவதற்காகக் கவர்ன்மெண்டு றகதாறி “ - இவற்றால் அந்நாளில் தம் நாட்டினின்று வேற்றுப் புலத்துக்குச் செல்லுங்கால் ஆட்சியாளரிடம் இருந்து வழிநடைச்சீட்டு" ஒன்று பெற்றுச் செல்வர் என்பது தெரியவருகிறது. ஆசர் சாமீன் சிறு சிறு குற்றம் செய்தவர்கள் அரசாங்கத்தில் காவலில் வைக்கப் படுவர். அவர்களை விடுவிக்க வேண்டும் எனில் அவர்க்கு வேறொருவர் புனை கொடுத்தல் வேண்டும். அரண்மனையார் எப்பொழுது அவனை அழைத்துவரச் சொல்கிறார்களோ அப்பொழுது அழைத்து வருமாறு உறுதி மொழி கூறிப் புனைபடுவது ஆசர் சாமீன் " என்று கூறப்படும். ஆசர் சாமீன்' பேரில் விடுதலை தருவது பற்றிச் சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இங்ங்னம் புனைபட்டவன் தன் சொற்படிக்குக் குற்றவாளியைக் கொணர்ந்து நிறுத்தாவிடில் குற்றவாளியின் பேரில் உள்ள குற்றத்துக்குரிய தண்ட இன்ஆத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். ஆசர் சாமீன் முச்சலிக்கையின் "ய ஒரு பகுதி பின்வருமாறு: ' பிரதியாரத்தில் வைத்திருக்கிற டிை மானோசி ரானோசி மானே என்பானை நான் என் சாமீன்பேரில் பிரதியாரத்திலிருந்து விடுதலை செய்து கொண்டு போறபடியினாலே மேற்படியானை அரண்மனையார் எப்பொழுது என்னிடத்தில் ஆசிர்படுத்தச் சொல்வார்களோ அந்நேரத்தில், ஆவுன்ை அழைத்துவந்து ஆசர் படுத்துவேன். அப்படிக்கு மேற்படியானை ஆசிர். செய்யாவிட்டால் மேற்படியான்பேரில் சாட்டுதலையாயிருக்கிறதற்கும் அபராதத் துக்கும் பாத்தியப்படுவேனாகவும். இந்தப்படி சம்மதித்து ஆசர் சர்மீன் முச்சலிக்கை எழுதிக் கொடுத்தேன் 1835 பிப்பிரவரி மாசம் 1ஆம் தேதி." 6. ச. ம. மோ. த. 2-80 7. 6-310 8. 6-311 9. 6-374 10. ஜஹதாரி என்றும் காணப்படுகிறது; ஆங்கிலத்தில் Pass Port என்றுள்ளது. மாதிரிப் படிவம் 7-866, 867இல் காணலாம், 11, 8–55