பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 நிலத்தின் விலை எல்லாப் பொருள்களின் விலை குறைவாகவும் மலிவாகவும் இருந்தமை யின் நிலத்தின் விலையும் குறைவாகவே இருந்தமை எதிர்பார்க்கக்கூடியதே. - ' கி. பி. 1787 : ஹஸ்ரத் ஹஸம்சா பக்கீர் தனக்குப்பேலஜி தக்யால் செய்வதற்குச் சாலி மங்கலத்தின் குடி மக்களிடமிருந்து அனாதி தரிசு காலி இடத்தை 2த் வேலி 700 சக்கரத்துக்கு வாங்கி ' என்ற குறிப்பு' ஒரு வேலியின் விலை சக்கரம் 280 என்று கூறுவதாக அமைந்துள்ளது. o " கம்பெனி உத்யோகஸ்தனாக இருந்தபோது நன்னிலம் தாலுகாவில் அகர நாடாங்குடி என்ற கிராமத்தில் இரண்டுவேலி நிலம் வாங்கியிருந்தேன் ; அதைக் கிரயம் செய்து ரூ. 250 பெற்றுக்கொண்டேன்' என்று குறிப்பு' ஒருவேலி நிலத்தின் விலை ரூ. 125 என்று பகர்வதாகவுள்ளது. - ஆனால் சர்க்காரில் 1829இல் வைத்தியநாதம் பேட்டையில் சர்க்கேல் ராமோஜி சர்ஜேராவ் காட்கே அவர்கள் பெயரால் 1வேலி, 8-19த் மாநிலத்தை 2180 சக்கரத்துக்கு வாங்கியதாகத் தெரிகிறது. இது மிக அதிகமான விலை என்பது சொல்லாமே அமையும். - ” The average price of Nansei per veli during 1828–29 was Rs. 165” என்று தஞ்சை ஜில்லா மானுவல் என்ற நூல் கூறும்." அந்நூலிலுள்ள பட்டியலில் 1852-53இல்தான் ஒரு வேலியின் சராசரி விலை ரூ.261 என்று காட்டப்பெற்றுள்ளது. எனவே 19-ஆம் நூற்றாண்டில் மிகக்குறைந்த விலையில் நிலம் மதிப்பிடப்பெற்றது என்பது விளங்கும். - தங்கம் வெள்ளி விலை 1769 : சேர் 3}க்கு சேர் 1க்கு 19 சக்கரம் வீதம் சக். 61-7" என்று ஒராவணக் குறிப்பு " உள்ளது. "கி. பி. 1776: வெள்ளிக்கட்டி நிறை 1: சேர் வாங்கி ஒரு சேருக்கு 16 சக். 4. பனம் விதம் 24 சக். பணம்' என்ற குறிப்பாலும், கி. பி. 182ஐ, ஒ, வாத்தியத்திற்கு வெள்ளி முலாம்பூச 14 மணங்கு வாங்கிய வகையில் 1 சேருக்கு 17 சக்கரம் 8. பணம் வீதம்......' என்ற குறிப்பாலும்' வெள்ளி விலை சரிந்திருந்தமை காணலாம். - * , on -- 43. 1-299 44. g. to. Guer. F. 16–7. 45. P. 322, Tanjore District Manual. 43. 2-8 47. ச. ம. மோ. த. 29-3 48. ச. ம. மோ, த. 27-28, _